புவியியல் :: நிலநடுக்கம்

61. நிலநடுக்கத்திற்குரிய முன்னறிவிப்புகள் யாவை?
1. பறவை, பாம்பு முதலியவை இடம் பெயரல், சிம்பன்சி குரங்குகளில் நடத்தை மாற்றம் உள்ளது.
2. நிலநடுக்க அலைகளின் நேர்விரைவில் முன்னரே வழக்கத்திற்கு மாறான அதிர்வுகள் தோன்றுதல்.
3. காந்த அளவீடுகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடு.
4. சீரான அதிர்ச்சிகள் இருத்தல். நிலநடுக்கம் ஏற்படுவதற்கு ஒரிரு நாட்களுக்குமுன் இவை இருக்கும்.
5. லேசர் கருவிகொண்டு அழுத்தத்தின் (stress) அறிகுறிகளை அளக்கலாம். லேசர் திரிவுமானி வளைவில் ஏற்படும உயர்வைப் பதிவு செய்யவல்லது.
6. நீரின் ரேடான் அளவில் உயர்வு ஏற்படுதல்.
7. நிலத்தடிநீர் மட்டங்ளில் மாற்றங்கள்.
8. மின்காந்த விளைவுகள்.
9. நீரில் ஈலியம் வளி அளவு சட்டென்று குறைதல். 1955இல் ஜப்பானில் ஒசாகாகோப். அதிர்ச்சியின் பொழுது ஈலிய உற்பத்திவீதம் குறைந்தது.
62. நிலநடுக்கம் தாக்காத கட்டிடங்கள் எவ்வாறு அமைப்பது?
1.பொதுவாக அது நிலஈர்ப்பை எதிர்த்துத் தாங்குவதாகவும் நேராகவும் அமைக்கப்படவேண்டும்.
2. கட்டிடத்தின் எடை 10 பங்கு என்றால் அதில் ஒரு பங்கு கூடுதல் வலிமை இருக்குமாறு அமைய வேண்டும். இது எந்த இழுப்பு அல்லது தள்ளும் ஆற்றலையும் சமாளிக்கவல்லது. ஜப்பானில் இந்த வீதம் 1.5.
63. உலக அளவில் நிலநடுக்கங்கள் தோன்றுவது பற்றிய உண்மைகள் யாவை?
1. மிகப் பெரும் நிலநடுக்கங்கள் அளவெண் 8க்கு மேல் ஆண்டுக்குச் சராசரி 1.
2. பெரும் நிலநடுக்கங்கள். அளவெண் 7-7-9 ஆண்டுக்குச் சராசரி 18.
3. வலுவான நிலநடுக்கங்கள். அளவெண் 6-6-9. ஆண்டுக்குச் சராசரி 120.
4. சீரான நிலநடுக்கங்கள். அளவெண் 5-5-9, ஆண்டுக்குச் சராசரி 800.
5. இலேசானவை. அளவெண் 4-49, ஆண்டுக்குச் சராசரி 6200.
6 சிறியவை. அளவெண் 3.39 ஆண்டுக்குச் சராசரி 49,000.
7. மிகச் சிறியவை. அளவெண் 3க்குக் கீழ். அளவெண் 1-2. ஒரு நாளைக்கு 8000. அளவெண் 2-3. ஒரு நாளைக்கு 1000. (The Hindu 26.9.2002).
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிலநடுக்கம் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - அளவெண், சராசரி, ஆண்டுக்குச், நிலநடுக்கங்கள்