புவியியல் :: நிலநடுக்கம்
21. நிலநடுக்கங்கள் எங்கு ஏற்படுகின்றன?
புவி ஒடு நிலைப்புத்தன்மை இழந்த இடங்களில் ஏற்படுகின்றன. புவி அமைப்பு முறையில் முதிரா மலை வளையங்களில் ஏற்படுகின்றன. இந்த வளையமுள்ள இடங்கள் பலூசிஸ்தான், இமாலய மலைகள், மேல் பர்மா.
22. பசிபிக் வளையத்தில் ஏற்படும் நில நடுக்கங்களின் சதவீதம் என்ன?
68% ஆகும்.
23. மையத்தரைக்கடல் பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களின் சதவீதம் என்ன?
21% ஆகும்.
24. நிலநடுக்கங்களின் வகைகள் யாவை?
1. எரிமலைசார் நிலநடுக்கங்கள்
2. தட்டுச்சார் நிலநடுக்கங்கள்
3. தீப்பாறை நிலநடுக்கங்கள்
25. நிலநடுக்கக் கொள்கைகள் யாவை?
1. சுருக்கக் கொள்கை
2. விரிவுக் கொள்கை
3. கண்ட நகர்வுக் கொள்கை
4. தட்டு நகர்வுக் கொள்கை.
26. நிலநடுக்கங்களின் பின் நிகழ்வுகள் யாவை?
குறைந்த அளவுள்ள பின் அதிர்ச்சிகள் இருக்கும். இவை ஒரிரு நாட்கள் தொடரும். குஜராத் நில நடுக்கங்களில் இவை இருந்தன.
27. நிலநடுக்கங்களின் சுட்டளவுகள் யாவை?
1. அளவெண் (M)
2. அட்சக்கோடு
3. தீர்க்கக் கோடு
4. மேல் மையம்.
28. நிலநடுக்க மையம் என்றால் என்ன?
நிலநடுக்கம் தோன்றும் மையம்.
29. எதிர் மையம் என்றால் என்ன?
மேல் மையத்திற்குக் குறுக்காகவுள்ள மையம்.
30. நிலநடுக்கத்திற்கு எத்தனை மையங்கள் உள்ளன?
நிலநடுக்க மையம், மேல் மையம், எதிர் மையம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிலநடுக்கம் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மையம், யாவை, கொள்கை, நிலநடுக்கங்களின், என்ன, நிலநடுக்கங்கள், மேல், ஏற்படுகின்றன