புவியியல் :: நிலநடுக்கம்

31. இதில் வழக்கமாகக் குறிப்பிடப்படுவது எது?
மேல் மையம்.
32. மேல் மையம் என்றால் என்ன?
நிலநடுக்கத்தின் குவியத்திற்குமேல் புவி மேற்பரப்பில் அமையும் புள்ளி. இது நிலநடுக்கங்களுக்குத் தகுந்தவாறு வேறுபடும். காட்டாக, 1966 இல் புது தில்லியில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மேல் மையம் 420 கி.மீ. தில்லிக்கு வடமேற்காக அமைந்தது.
33. நிலநடுக்கத்தின் சேதம் எதைப் பொறுத்தது?
நிலநடுக்கத்தின் குவியத்தைப் பொறுத்தது. குவியம் ஆழமாக ஆழமாகச் சேதம் குறையும். ஆழம் மிகக் குறைவாக இருக்குமானால் சேதம் அதிகம் பெரும். சேதம் விளைவிக்கும் நிலநடுக்கங்களின் குவியம் 30 கி.மீ ஆழம் இருக்கும்.
34. நிலநடுக்கம் வெளிப்படுத்தும் ஆற்றல் எவ்வாறு தெரிவிக் கப்படுகிறது?
(M) என்னும் அளவெண்ணால் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆற்றல் 10,000 அணுகுண்டுகளின் ஆற்றல்களுக்குச் சமம்.
35. நிலநடுக்கம் ஏற்படும் நேர அளவு என்ன?
45 வினாடிகளிலிருந்து 5 நிமிடங்கள் வரை.
36. நிலநடுக்கம் வழக்கமாக எப்பொழுது ஏற்படுகிறது?
அதிகாலை அல்லது இரவு.
37. நிலநடுக்கம் ஏற்படக் காரணங்கள் யாவை?
1. தட்டு ஆற்றல்கள்.
2. எரிமலை ஆற்றல்கள். இவற்றில் முன்னவை முதன்மைக் காரணங்கள் ஆகும்.
38. நிலநடுக்க அளவுகோல் யாது?
ரிக்டா அளவுகோல் ஆகும்.
39. ரிக்டா அளவுகோல் என்றால் என்ன?
இது ஒரு மடக்கை அளவுகோல். நிலநடுக்கத்தின் ஆற்றலை மதிப்பிடும் அளவுகோல்.
40. இதை அமைத்தவர் யார்? எப்பொழுது?
அமெரிக்க புவி இயற்பியலார் சார்லஸ் ரிக்டா இதை 1935இல் அமைத்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிலநடுக்கம் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நிலநடுக்கம், அளவுகோல், சேதம், நிலநடுக்கத்தின், ரிக்டா, மையம், என்ன, மேல்