வேதியியல் :: வேதிவினைகளும் விதிகளும்
(1) வேதிவினைகள்
1. இயல்பு மாற்றம் என்றால் என்ன?
புதிய பொருள் உண்டாகாத தற்காலிக மாற்றம். எ-டு. பனிக்கட்டி உருகி நீராதல்.
2. வேதி நிறுத்தி என்றால் என்ன?
வேதி வினையை நிறுத்தும் பொருள்.
3. வேதிவினை என்றால் என்ன?
இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கள் வினைபுரிவதால், புதிய பொருள்கள் தோன்றுதல். இவ்வினையைச் சமன்பாடு தெரிவிக்கும்.
Н2 + О2 —» 2Н2О
4. வேதிமாற்றம் என்றல் என்ன?
புதிய பொருள்கள் உண்டாகக் கூடிய நிலைத்த மாற்றம். எ-டு. துருப்பிடித்தல்.
5. வேதி மாற்றத்தில் உண்டாகும் நிகழ்ச்சிகள் யாவை?
வெப்பம், ஒலி, ஒளி, நிறமாற்றம்.
6. வேதிமாற்றத்தைத் தூண்ட வல்ல காரணிகள் யாவை?
நெருங்கிய தொடர்பு, சூடாக்கல், ஒளி, மின்சாரம்.
7. வேதி மாற்றத்தின் வகைகள் யாவை?
1. வேதிக்கூடுகை வேதிச் சேர்க்கை. இதில் இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கள் சேர்ந்து ஒரு புதிய பொருளை உண்டாக்கும்.
2Mg+ O2 → 2MgO.
2. இடப்பெயர்ச்சி - இதில் ஒரு தனிமம். ஒரு சேர்மத்தி லுள்ள மற்றொரு தனிமத்தை வெளியேற்றித் தான் அவ்விடத்தை அடைவது.
Zn + H2SO4 → ZnSO4 + H2
3. வேதிச்சிதைவு - ஒரு சேர்மம் சிதைவுற்று ஒன்றுக்கு மேற்பட்ட தனித்த பொருள்களாக மாறுதல்.
2Hgo – 2Hg + O2.
4. இரட்டைச் சிதைவு - இரு வேதிப் பொருள்கள் வினையாற்றும் பொழுது அவற்றின் உறுப்புகள் இடம் மாறி இரு புதிய பொருள்கள் உண்டாதல்.
CuSO4 + 2NaOH → Na2SO4 + Cu(OH)2.
8. வேதியாற்றல் என்றால் என்ன?
இது பிணைப்பாற்றலே. ஒர் அணு அல்லது மூலக்கூறி லுள்ள ஆற்றலில் ஒரு பகுதியை வேதிவினை விடுவிக்கும். கட்டு அறுபடும் பொழுது, அணுக்கள் பிரிந்து பிணைப் பாற்றல் வெளிப்படும்.
9. ஆக்சிஜன் ஏற்றி என்றால் என்ன?
எரிதலை உண்டாக்கும் உயிர் வளியைத் தரும் பொருள். எ-டு. அய்டிரசன் பெராக்சைடு.
10. ஆக்சிஜன் ஏற்றம் என்றால் என்ன?
ஒரு மூலக்கூறிலிருந்து நேரயனிகள் நீங்கல் அல்லது எதிரயனிகள் சேர்தல் அல்லது அய்டிரஜன் நீங்கல். உயிர் வாழத் தேவைப்படும் ஒர் அடிப்படைச் செயல்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேதிவினைகளும் விதிகளும் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், பொருள்கள், வேதி, அல்லது, யாவை, பொருள், மேற்பட்ட, மாற்றம்