வேதியியல் :: வேதிவினைகளும் விதிகளும்
21. ஏற்ற இறக்கத் தொடர் என்றால் என்ன?
ஆக்சிஜன் ஏற்ற இறக்கமுறை.இதில் ஒரு பொருள் ஆக்சிஜன் ஏற்றம் பெறுகிறது. மற்றொன்று ஒடுக்கப் படுகிறது.
22. துருப்பிடித்தல் என்றால் என்ன?
இரும்பின் நீரேறிய ஆக்சைடு. இரும்பு ஈரக் காற்றுக்கு உட்படும்போது, அதன் மேல் உண்டாவது. இது ஒரு வேதிச் செயல். இதைத் தடுக்க வண்ணம் பூச வேண்டும்.
23. எரிதல் என்றால் என்ன?
இது ஒர் ஆக்சிஜன் ஏற்றம். இந்தச் செயல் விரைவாக நடைபெறுவதால் வெப்பமும் ஒளியும் உண்டாகும். ஆகவே, இது வேதிமாற்றமே. பொசுங்கும் பொருள்கள் எரியும். .
24. வெடித்தல் என்றால் என்ன?
விரைவான எரிதலால் உண்டாகும் வளிகள் பெருகும் பொழுது ஏற்படும் உடன் வெடிப்பு. இது கடுமையாக இருக்கும். சிறிய இடத்தில் வளிகளை அடைத்துப் பற்ற வைக்கும் பொழுது அவை பெருகி வலுவான விசையை உண்டாக்க வல்லவை.இவ்விசையினாலேயே வெடித்தல் ஏற்படுகிறது. எ-டு. சீனிவெடி வெடித்தல்.
25. பெர்முடிட் என்றால் என்ன?
நீரில் கரைந்துள்ள தேவையில்லாத பொருளை நீக்கும் வேதிப் பொருள். இது சீயோலைட் சோடியம் அலுமினியம் சிலிகேட்.
26. நிலைகாட்டிகள் என்றால் என்ன?
நிறங்காட்டிகள். காடியாகவோ உப்பு மூலியாகவோ இருக்கும். வேதிப்பொருள்கள் தம் நிற மாற்றத்தால் வேதி வினையைக் காட்ட வல்லவை. எ-டு. மீத்தைல் கிச்சிலி, மீத்தைல் ஊதா.
27. குளோரின் நீக்கிகள் என்றால் என்ன?
சலவைத்தூள்ளால் வெளுக்கப்பட்ட துணிகளிலுள்ள அதிகப்படியான குளோரினை நீக்கும் பொருள். எ-டு. சோடியம் தயோசல்பேட்டு, கந்தக இரு ஆக்சைடு, சோடியம் சல்பேட்டு.
28. ஆக்சைடு என்றால் என்ன?
ஆக்சிஜன் உள்ள இரு தனிச் சோடியம். எ-டு. மாங்கனிஸ் இரு ஆக்சைடு.
29. ஆக்சிஜன் ஏற்றும் அமிலம் எது?
நைட்டிரிக் அமிலம், கந்தக அமிலம்.
30. ஆக்சிஜன் அளவியல் என்றால் என்ன?
ஒடும் குருதியில் ஆக்சிஜன் செறிவை அளத்தல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேதிவினைகளும் விதிகளும் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், ஆக்சிஜன், சோடியம், ஆக்சைடு, அமிலம், பொருள், வெடித்தல்