வேதியியல் :: வேதிவினைகளும் விதிகளும்

61. சீசெல்வினை என்றால் என்ன?
ஒரு கரிமச் சேர்மத்திலுள்ள மீத்தாக்சைல் தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்யும் முறை.
62. இதை உருவாக்கியவர் யார்?
1886இல் சீசெல் என்பவர் உருவாக்கினார்.
63. வர்ட்ஸ் வினை என்றால் என்ன?
உலர் ஈத்தரில் சோடியத்தைச் சேர்த்து ஒர் ஏலோ ஆல்கேனை நீரோட்டத்தில் கொதிக்கவைத்து ஆல்கேன்கள் தயாரிக்கும் முறை.
64. கிரிஸ் வினையாக்கி என்பது என்ன?
சல்போனிலிகக் காடியின் கரைசல். ஆல்பா நாப்தைல் அமைனும் அசெட்டிகக் காடியும் நீரில் சேர்ந்த கரைசல். நைட்ரசக் காடியைக் கண்டறியப் பயன்படுவது.
65. நைலாந்தர் வினையாக்கி என்றால் என்ன?
பொட்டாசியம், சோடியம் டார்டரேட்டு, பொட்டாசியம் அய்டிராக்சைடு ஆகியவை கரைந்த கரைசல். சிறுநீரில் சர்க்கரை இருப்பதைக் கண்டறியப் பயன்படுதல்.
66. பயால் வினையாக்கி என்பது யாது?
10% இரும்பு (III) குளோரைடும் அடர் அய்டிரோ குளோரிகக் காடியும் ஆர்சனாலும் சேர்ந்த கலவை.
67. இதன் பயன் யாது?
பெண்டோஸ் சர்க்கரையை ஆய்ந்தறியப் பயன்படுவது. இச்சர்க்கரையை இவ்வினையாக்கியுடன் சேர்த்துக் கொதிக்க வைக்கப் பச்சைநிறம் உண்டாகும்.
68. பழுப்புவனைய ஆய்வு என்றால் என்ன?
நைட்டிரிகக் காடியைக் கண்டறியும் ஆய்வு. பெரஸ் சல்பேட்டுக் கரைசலில் சிறிது அடர் கந்தகக் காடியைச் சேர். பின் இக்கலவையில் சிறிது அடர்நைட்டிரிக காடியைச் சேர். நீர்மட்டத்தில் பழுப்பு வளையம் ஏற்படும்.
69. பதிலீட்டு வினை என்றால் என்ன?
இடப்பெயர்ச்சி வினை. மீத்தேனிலுள்ள அய்டிரசன் அணுக்களைக் கதிரவன் ஒளியில் குளோரின் அணுக்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடப்பெயர்ச்சி செய்யும். இதற்குப் பதிலீட்டு வினை என்று பெயர்.
70. அய்டிரோகுளோரிக அமிலத்திற்கு ஆய்வு என்ன?
வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலை இந்த அமிலத்துடன் சேர்க்க, வெள்ளிக் குளோரைடு வீழ்படிவு உண்டாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேதிவினைகளும் விதிகளும் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், வினை, ஆய்வு, கரைசல், வினையாக்கி