வேதியியல் :: வேதிவினைகளும் விதிகளும்

11. ஆக்சிஜன் ஏற்ற இறக்கம் என்றால் என்ன?
ஆக்சிஜன் ஏற்றத்தையும் ஒடுக்கலையும் குறிப்பது. இரண்டும் பின்னிப் பிணைந்தவை. ஆக்சிஜன் ஏற்றச் செயலின் உடனிகழ்ச்சி ஒடுக்கச் செயல்.
12. இவ்விரு செயல்களும் மின்வாயில் எவ்வாறு நடை பெறுகின்றன?
நேர்மின்வாயில் ஆச்சிஜன் ஏற்றமும் எதிர்மின்வாயில் ஒடுக்கலும் நடைபெறுகின்றன. இச்செயல்கள் மின் வேதியியல் முறைகள் சார்ந்தவை.
13. ஆக்சிஜன் ஏற்றி நீக்கல் என்றால் என்ன?
ஆக்சிஜன் ஏற்றத்தின் மூலம் கரி இரு ஆக்சைடையும் அய்டிரஜனையும் நீக்கல்.
14. ஆக்சிஜன் ஏற்றிப் பாஸ்பேட்டாக்கல் என்றால் என்ன?
ஒர் ஆற்றல் மிகு பிணைப்பு மூலம் ADP கரிமப் பாஸ்பேட்டைச் சேர்ந்து ATP உண்டாகுமாறு செய்தல்.
15. ஒடுக்கல் என்றால் என்ன?
வறுக்கப்பட்ட தாதுவானது துத்தநாக ஆக்சைடு, தூள் கரியுடன் சேர்ந்து சூடாக்கப்படுகிறது. இப்போது கல்கரி துத்தநாக ஆக்சைடைத் துத்தநாகமாகக் குறைக்கிறது. ஆக்சிஜன் நீங்குகிறது.
16. அய்டிரஜன் ஏற்றம் என்றால் என்ன? ஒரு சேர்மம் அய்டிரஜனோடு சேர்ந்து வினையாற்றுதல். வனஸ்பதி தயாரிப்பதில் இம்முறை பயன்படுகிறது.
17. அய்டிரஜன் அயனிச் செறிவு என்றால் என்ன?
ஒரு லிட்டர் கரைசலில் அடங்கியுள்ள அய்டிரஜன் அயனிகளின் கிராம் எண்ணிக்கை.
18. ஒடுக்கி என்றால் என்ன?
ஏனைய பொருள்களில் ஒடுக்கலை உண்டாக்கும் பொருள். எ-டு. கல்கரி.
19. ஒடுக்கல் என்றால் என்ன?
இது ஒரு முறை. இதில் ஒரு மின்னணு அணு அல்லது அயனியோடு சேர்கிறது. இச்செயல் ஆக்சிஜன் ஏற்றத்தைத் தொடர்ந்து வருவது.
20. ஒடுக்கலின் வகைகள் யாவை?
1. ஒரு மூலக்கூறிலிருந்து ஆக்சிஜனை நீக்கல்.
2. அதன் கூட்டுப் பொருள்களிலிருந்து உலோகம் பிரிதல்.
3. ஒர் அணு அல்லது அயனியிலிருந்து நேர் இணைதிறன் குறைதல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேதிவினைகளும் விதிகளும் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - ஆக்சிஜன், என்ன, என்றால், அய்டிரஜன், நீக்கல், சேர்ந்து