வேதியியல் :: வேதிவினைகளும் விதிகளும்

51. ஈதல் பிணைப்பு என்றால் என்ன?
இது ஒர் இணைப் பிணைப்பு. இதில் இரு தனி மின்னணுக்களுக்கும் ஒரே ஒரு அணுவால் மட்டும் பிணைப்பு வழங்கப்படுகிறது. எ-டு. பொரான் முப்புளோரைடு, அம்மோனியா ஆகிய இரண்டும் சேர்ந்து உண்டாகும் சேர்ப்புச் சேர்மம். இதில் நைட்ரஜன் இரு தனி மின்னணுக்களைப் பொரானுக்குக் கொடுத்து ஈதல் பிணைப்பை ஏற்படுத்துகிறது.
52. வேதிப்பிணைப்புக்கு உட்படா அணுக்கள் யாவை?
ஈலியம், நியான், ஆர்கன்.
53. பிணைப்பு நீளம் என்றால் என்ன?
வேதிக்கட்டில் சேர்க்கப்படும் இரு அணுக்களின் கருக்களுக்கிடையே உள்ள தொலைவு.
54. பிணைப்பு முனைத்திறன் என்றால் என்ன?
மின்னணுக்களை ஈர்க்கும் வேதிப் பிணைப்பிலுள்ள இரு அணுக்களின் திறனிலுள்ள வேறுபாடு.
55. பார்போர்டு வினையாக்கி என்றால் என்ன?
செம்பு (II) அசெட்டேட்டு, எத்தனாலிகக் காடி ஆகிய இரண்டும் சேர்ந்த கலவை. ஒற்றைச் சர்க்கரைகளைக் கரைசல் நிலையில் ஆய்ந்து பார்க்கப் பயன்படுவது. இக்கலவையை ஒற்றைச் சர்க்கரையுடன் சேர்த்து வெப்பப்படுத்தச் செம்பு (I)ஆக்சைடின் செந்நிறவீழ்படிவு உண்டாகும்.
56. பெனிடிக்ட் கரைசல் என்றால் என்ன?
சோடியம் சிட்ரேட்டு, சோடியம் கார்பனேட்டு, செம்பு (II) சல்பேட்டு ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை.
57. இதன் பயன் யாது?
ஒடுங்கு சர்க்கரைக் கரைசலை ஆய்ந்து பார்க்கப் பயன்படுவது. சர்க்கரைக் கரைசலோடு இக்கரைசலைச் சேர்த்து வெப்பப்படுத்தச் செம்பு ()ஆக்சைடின் செந்நிற வீழ்படிவு உண்டாகும்.
58. டோலன் வினையாக்கி என்றால் என்ன?
அனைவு அயனி. Ag(NH3)2+ இன் கரைசல். இந்த ஆய்வு ஆல்டிகைடுகளையும் ஆல்கைன்களையும் கண்டறியப் பயன்படுவது.
59. பேயர் வினையாக்கி என்றால் என்ன?
இது காரப் பொட்டாசியம் பர்மாங்கனேட். இவ்வினையாக்கியை ஆல்கேன் நிறமற்றதாக்கும் நிறைவுறாத்தன்மைக்கு இது ஆய்வு.
60. கேரியஸ் முறை எதற்குப் பயன்படுகிறது?
கரிமச்சேர்மங்களில் காணப்படும் ஹேலஜன்கள் (உப்பீனிகள்), பாசுவரம், கந்தகம் ஆகியவற்றைக் கண்டறியப் பயன்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேதிவினைகளும் விதிகளும் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, பிணைப்பு, பயன்படுவது, செம்பு, கரைசல், உண்டாகும், ஆகிய, வினையாக்கி