வேதியியல் :: வேதிவினைகளும் விதிகளும்

31. பலவகை ஆக்சைடுகளைக் கூறுக.
ஒராக்சைடு - கரி ஓராக்சைடு, ஈராக்சைடு - கரி இரு ஆக்சைடு. மூவாக்சைடு - கந்தக முவாக்சைடு.
32. இரு சல்பைடு என்றால் என்ன?
ஒரு மூலக்கூறு கந்தகத்தில் ஈரணுக்கள் உள்ள சல்பைடு. எ-டு. கரி இரு சல்பைடு. இச்சல்பைடில் கந்தகம் கரையும்.
33. கந்தக அமிலம் எந்த உப்பைக் கொடுக்கும்?
சல்பேட்
34. நைட்டிரிக் காடி எந்த உப்பைக் கொடுக்கும்?
நைட்ரேட்
35. அயடிரோ குளோரிகக் காடி எந்த உப்பைக் கொடுக்கும்?
குளோரைடு.
36. பாசுவரிக அமிலம் எந்த உப்பைக் கொடுக்கும்?
பாஸ்பேட்
37. பெராக்சைடு என்றால் என்ன?
ஒரு கனிமக் கூட்டுப் பொருள்.
38. பிணைப்பு என்றால் என்ன?
அணுக்களையும் அணுத்தொகுதிகளையும் இறுக்கிப் பிடிக்கும் விசை.
39. வேதிநாட்டம் என்றால் என்ன?
ஓரணு மற்றொரு அணுவோடு சேரும் போக்கு. வேதிச் செயலுக்கு இன்றியமையாதது.
40. வேதிப் பிணைப்பு என்றால் என்ன?
ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களை நெருக்கி வைக்கும் விசை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேதிவினைகளும் விதிகளும் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, கொடுக்கும், உப்பைக், எந்த, சல்பைடு