சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு

அதிகாரம் 46
2 கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களுடைய மீட்பை முன்னிட்டு, இஸ்ராயேலை உரிமைப்படுத்திக் கொள்வதற்காக எழும்பின பகைவர்களை வெல்வதில் மகா வல்லமையுள்ளவராய் இருந்தார்.
3 தம் கைகளைத் தூக்கிப் பகைவர் நகரங்களுக்கு விரோதமாய் அம்புகளை எறிந்ததால் எவ்வளவோ மகிமை அடைந்தார்!
4 அவருக்கு முன்பாக எவன் எதிர்த்து நின்றான்? ஏனென்றால், பகைவர்களை ஆண்டவரே கூட்டி வந்தார்.
5 அவருடைய கோபத்தில் கதிரவன் தடைபடவில்லையோ? ஒரு நாள் இரண்டு நாளைப் போல் ஆகவில்லையோ?
6 எப்பக்கத்திலும் பகைவர்களை எதிர்க்கையில் அவர் வல்லபக் கடவுளை மன்றாடினார். மகிமையுள்ள புனித கடவுள் அவர் மன்றாட்டைக் கேட்டுப் பெருங்கல் மழையைப் பலமாய் அவர்கள் மேல் விழச் செய்தார்.
7 அவர் பகையாளியான இனத்தாரைத் தாக்கினார்@ கீழிறங்கிப் பகைவர்களை அழித்தொழித்தார்@
8 கடவுளுக்கு விரோதமாய்ச் சண்டை செய்வது எளிதானதல்லவென்று, அன்னியர் அவருடைய பலத்தை அறியும்படியான விதமாய் நடத்தினார்@ வல்லபமுள்ளவரையே பின்பற்றினார்.
9 மோயீசன் காலத்தில் இரக்கத்தைக் காண்பித்தார். யெப்போனின் மகனான காலேபு பகைவரை எதிர்க்கவும், மக்களைப் பாவத்தினின்று தடுக்கவும், தீய குணத்தின் முறுமுறுத்தலை அடக்கவும் செய்தார்.
10 ஆறு இலட்சம் காலாட்கள் கொண்ட படையினால் ஆபத்தினின்று காப்பாற்றப்பட்ட அவ்விருவரும் அவர்களை உரிமைக்கும், பாலும் தேனும் பொழியும் நாட்டுக்கும் அழைத்துப் போக நியமிக்கப்பட்டார்கள்.
11 காலேபுக்கும் ஆண்டவர் வலிமையைக் கொடுத்தார். முதுமை வரையிலும் பூமியின் உயர்ந்த இடத்தில் ஏறும்படியான வலிமை அவருக்கு இருந்தது. அவருடைய சந்ததி உரிமையை அடைந்தது.
12 அவர் புனித கடவுளுக்கு ஊழியம் செய்வது நலமானதென்று இஸ்ராயேல் மக்களெல்லாரும் அறியும்படி செய்தார்.
13 பிறகு நடுவர்கள் ஒவ்வொருவராய் வந்தனர். அவர்கள் இதயம் தீநெறிப்பட்டதன்று. அவர்கள் ஆண்டவரிடத்தினின்று அகன்று போகவில்லை.
14 அவர் அவர்களுடைய நினைவு புகழ்ச்சியில் இருக்கும்படியாகவும், அவர்களுடைய எலும்புகள் தங்களிடம் வளமுறவும்,
15 அவர்களுடைய பெயர் நித்தியத்திற்கும் நிலைத்திருக்கவும், புனித மனிதரின் மகிமை அவர்களுடைய பிள்ளைகளிடம் தங்கவும் செய்தார்.
16 ஆண்டவருடைய இறைவாக்கினரான சாமுவேல் ஆண்டவராகிய கடவுளால் நேசிக்கப்பட்டவர். அவர் அரசாட்சியைப் புதுப்பித்தார். தம்முடைய மக்களிடையே தலைவர்களை அபிஷேகம் செய்தார்.
17 ஆண்டவருடைய கட்டளைப்படியே மக்களுக்கு நீதி செலுத்தினார். அதை யாக்கோபின் கடவுள் கண்டார். பிரமாணிக்கமுள்ள இறைவாக்கினராக அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
18 வார்த்தைகளில் உண்மையுள்ளவராக அறியப்பட்டார். ஏனென்றால், அவர் ஒளியின் கடவுளைக் கண்டார்@
19 எப்பக்கத்திலும் சூழ்ந்திருந்த பகைவர்களை எதிர்ப்பதில் ஆண்டவரை மன்றாடினார்@ மாசற்ற செம்மறிக் குட்டியின் காணிக்கையைச் செலுத்தினார்.
20 ஆண்டவர் பரலோகத்தினின்று குரல் கொடுத்தார்@ பெரியதொரு தொனியால் தம் குரல் கேட்கும்படி செய்தார்.
21 தீரியருடைய தலைவர்களையும், பிலிஸ்தியருடைய எல்லாத் தலைவர்களையும் அவர் முறியடித்தார்.
22 தமது வாழ்க்கையினுடையவும் காலத்தினுடையவும் முடிவின் முன் ஆண்டவருடையவும் கிறிஸ்துவுடையவும் முன்னிலையில் சாட்சி தந்தார். அவர் பணமேனும் காலணியின் கயிறுகளேனும் எவனிடத்திலிருந்தும் வாங்கினவரல்லர். எவனும் அவரைக் குற்றம் சாட்டவில்லை.
23 இதன் பிறகு, அவர் துயில் கொண்டார்@ அரசனுக்குத் தெரியப்படுத்தினார்@ தமது வாழ்வின் முடிவை அவனுக்குக் காண்பித்தார்@ மக்களுடைய அக்கிரமத்தை அழிக்க, இறைவாக்கில் மண்ணுலகினின்று தம் குரலை உயர்த்தினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | ... | 50 | 51 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவர், செய்தார், ஏற்பாடு, பகைவர்களை, அவர்களுடைய, புனித, பழைய, ஆகமம், சீராக், அவருடைய, ஆண்டவர், பிறகு, செலுத்தினார், தமது, தலைவர்களையும், குரல், செய்வது, ஆண்டவருடைய, ஏனென்றால், இருந்தார், ஆன்மிகம், திருவிவிலியம், கடவுளால், மகிமை, கடவுள், எப்பக்கத்திலும், அவருக்கு, கடவுளுக்கு