மிக்ஸ்டு தக்காளி தோசை
தேவையானவை: புழுங்கலரிசி - 2 கப், பச்சரிசி - ஒரு கப்,உளுத்தம்பருப்பு - அரை கப், வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.தோசையின் மீது தூவ: பொடியாக நறுக்கிய தக்காளி - 2 கப்,தேங்காய் துருவல் - அரை கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன், மல்லித்தழை - அரை கப், மிளகுத்தூள்- ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - ஒருடேபிள்ஸ்பூன்.
செய்முறை: உளுத்தம்பருப்பு, அரிசி, வெந்தயம் மூன்றையும் ஊறவைத்து வெண்ணெய் போல்அரைத்துக் கொள்ளுங்கள். பொங்கி வரும்வரை புளிக்க விடுங்கள். தூவ வேண்டிய பொருட்களைஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். தோசைக்கல்லில் மெல்லிய தோசையாக ஊற்றி நன்குவெந்ததும், கலந்து வைத்துள்ள காய்கறிக் கலவையை அதன்மேல் தூவி, தோசையை மடித்துஎடுங்கள். ருசியான தோசை ரெடி!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மிக்ஸ்டு தக்காளி தோசை, 30 வகையான தக்காளி சமையல், 30 Type Tomato Recipes, நறுக்கிய, பொடியாக, Recipies, சமையல் செய்முறை