தக்காளி தோசை
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், புழுங்கல் அரிசி - ஒருகப், வெந்தயம் - 2 டீஸ்பூன், தக்காளி - கால் கிலோ, காய்ந்தமிளகாய் - 10, தேங்காய் துருவல் - அரை கப், உப்பு -தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, புழுங்கல் அரிசி, வெந்தயம் மூன்றையும்ஊற வையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், காய்ந்தமிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக அரைத்து 4-லிருந்து 5மணி நேரம் புளிக்க விடுங்கள். பிறகு தேங்காய் துருவல், உப்புசேர்த்து கலந்து தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு மெல்லியதோசையாக இடுங்கள். மொறுமொறு தக்காளி தோசை ரெடி.குறிப்பு: விருப்பப்பட்டால், வெங்காயம், கறிவேப்பிலை வதக்கி சேர்க்கலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தக்காளி தோசை, 30 வகையான தக்காளி சமையல், 30 Type Tomato Recipes, தக்காளி, Recipies, சமையல் செய்முறை