தக்காளி ஜாம்
தேவையானவை: மிக்ஸியில் அடித்து வடிகட்டிய தக்காளிஜூஸ் - 2 கப், சர்க்கரை - ஒரு கப், சிட்ரிக் ஆசிட் - அரைடீஸ்பூன், ரோஸ் எசன்ஸ் (விருப்பப்பட்டால்) - ஒரு டீஸ்பூன்,ரெட் கலரிங் பவுடர் - ஒரு சிட்டிகை.
செய்முறை: தக்காளி ஜூஸ், சர்க்கரை, சிட்ரிக் ஆசிட்மூன்றையும் வாணலியில் கொட்டி, மிதமான தீயில் கிளறுங்கள்.பாகு பதத்தில் வந்ததும் (தட்டில் விட்டால் முத்து போல்விழும்) இறக்கி கலரிங் பவுடர், ரோஸ் எசன்ஸ் விடுங்கள். ஒருமரப்பலகையின் மேல் கண்ணாடி பாட்டிலை வைத்து சூடாகநிரப்புங்கள். பிரெட், சப்பாத்திக்கு ஏற்ற பிரமாதமான ஜாம்இது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தக்காளி ஜாம், 30 வகையான தக்காளி சமையல், 30 Type Tomato Recipes, , Recipies, சமையல் செய்முறை