பேக்ட் சேமியா
தேவையானவை: சேமியா -1 கப், பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - 4,வெண்ணெய் - இரண்டரை டீஸ்பூன், சீஸ் - 4 கட்டி, உப்பு - ருசிக்கு, பால் - ஒன்றரை கப், மைதா - 2டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சேமியாவை 6 கப் கொதிக்கும் தண்ணீரில் வேக விட்டு வடியுங்கள். வெங்காயம், பூண்டு,மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். வெண்ணெயை உருக்கி, பூண்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி,பின்னர் வெங்காயம், மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள். அதில் மைதாவை சேர்த்து, 1 நிமிடம் வதக்கிபால் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறுங்கள். கடைசியில் சேமியா, உப்பு சேர்த்து கிளறி, சிறிது வெண்ணெய்தடவிய பேக்கிங் பாத்திரத்தில் பரவினாற்போல் கொட்டுங்கள். அதன் மேல் சீஸ் கட்டியை துருவிப் போட்டு,மூடியால் மூடி, நடுத்தர சூட்டில் 15 நிமிடம் ‘பேக்’ செய்யுங்கள். (ஓவன் இல்லாதவர்கள், குக்கருக்குள் டிரேயைவைத்து, கேஸ்கட், வெயிட் போடாமல் அடுப்பில் வைத்து, முக்கால் மணி நேரம் வைத்து ‘பேக்’ செய்யுங்கள்).
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பேக்ட் சேமியா, 30 வகையான சேமியா உணவுகள், 30 Type Semiya, சேர்த்து, நிமிடம், வெங்காயம், Recipies, சமையல் செய்முறை