சேமியா ஃப்ரூட் கீர்
தேவையானவை: சேமியா - அரை கப், பால் - 3 கப், சர்க்கரை - ஒன்றேகால் கப், பாதாம் பருப்பு - 8,முந்திரிப்பருப்பு - 8, பழக்கலவை - 1 கப், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: சேமியாவை சிறுதுண்டுகளாக ஆக்குங்கள். நெய்யுடன் கலந்து வறுத்துக் கொள்ளுங்கள் (வாணலியில்நெய்யைக் காயவைத்து, சேமியாவைப் போட்டு வறுத்தால் ஒரேமாதிரி வறுபடாது. முதலிலேயே சேமியாவில்நெய்யைப் பிசறிவைத்துவிட்டு வறுப்பது நல்லது). பாலை பொங்கக் காய்ச்சி, அதில் சேமியாவை சேருங்கள்.பெரிய தீயில் 2 நிமிடம் வேகவிட்டு, தீயைக் குறைத்து நன்கு வேக விடுங்கள். சேமியா நன்கு வெந்தவுடன்சர்க்கரை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிடுங்கள். அடுப்பிலிருந்து இறக்கி, பொடியாக நறுக்கிய பாதாம்முந்திரியை சேருங்கள். ஆறியவுடன் பழத் துண்டுகள், க்ரீம் சேர்த்து குளிர வைத்து பரிமாறுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேமியா ஃப்ரூட் கீர், 30 வகையான சேமியா உணவுகள், 30 Type Semiya, , Recipies, சமையல் செய்முறை