கோவா சேமியா டிலைட்

தேவையானவை: சேமியா - அரை கப், கோவா - 50 கிராம், கேரட் - 1, முந்திரிப்பருப்பு - 10, சர்க்கரை -ஒன்றேகால் கப், நெய் - 4 டீஸ்பூன், ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன், வெள்ளரி விதை அல்லது சாரைப்பருப்பு - 1டீஸ்பூன்.
செய்முறை: கேரட்டைக் கழுவி, துருவிக்கொள்ளுங்கள். சேமியாவை சிறு துண்டுகளாக்கி நெய் சேர்த்துவறுத்தெடுங்கள் (2 நிமிடம்). ஒரு அடுப்பில் ஒன்றரை கப் தண்ணீரை கொதிக்கவிடுங்கள்.மறு அடுப்பில் ஒரு கடாயில் நெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய முந்திரியைச் சேர்த்து, அரை நிமிடம் வறுத்து,கொதிக்கும் நீரை சேருங்கள். அதில் வறுத்த சேமியாவை சேர்த்து நன்கு வேகவிடுங்கள்.சேமியா நன்கு வெந்த பின்னர் துருவிய கேரட்டை சேர்த்து, மேலும் சிறிது கிளறி சர்க்கரை, கோவா சேர்த்துகிளறுங்கள். சர்க்கரை சேர்ந்து நன்கு சுருண்டு வந்ததும், ஏலக்காய்தூள், வெள்ளரி விதை சேர்த்து நன்கு கிளறிசூடாக பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோவா சேமியா டிலைட், 30 வகையான சேமியா உணவுகள், 30 Type Semiya, நன்கு, சேர்த்து, நெய், சர்க்கரை, Recipies, சமையல் செய்முறை