சேமியா வாங்கிபாத்
தேவையானவை: சேமியா - 1 கப், கத்திரிக்காய் - சிறியதாக 6, பெரிய வெங்காயம் - 1, புளி கரைசல் - 1டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 2 டீஸ்பூன்.வறுத்து பொடிக்க: காய்ந்த மிளகாய் - 8, தனியா - ஒன்றரை டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒன்றரைடேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன்(ஒன்றாக வறுத்து பொடியுங்கள்).
செய்முறை: கத்திரிக்காய், வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள். 2 டீஸ்பூன் எண்ணெயில்சேமியாவை லேசாக வறுத்து 6 கப் கொதிக்கும் தண்ணீரில் வேக விட்டு வதக்குங்கள். நெய்யை காய வைத்துதாளிக்கும் பொருட்களை சேர்த்து சிவந்ததும் வெங்காயம், புளி, உப்பு, மஞ்சள் தூள் கலந்து 2 நிமிடம்வதக்குங்கள். பின்னர் கத்திரிக்காய் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கி, புளி தண்ணீர், உப்பு, அரைத்த தூள்,கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி சேமியாவை சேர்த்து கலந்து பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேமியா வாங்கிபாத், 30 வகையான சேமியா உணவுகள், 30 Type Semiya, சேர்த்து, டீஸ்பூன், புளி, டேபிள்ஸ்பூன், வறுத்து, கத்திரிக்காய், Recipies, சமையல் செய்முறை