‘ஆல் இன் ஒன்’ தால்
தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், பாசிப்பருப்பு - அரை கப், பெரிய வெங்காயம் - 1,தக்காளி - 1, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிதளவு, பூண்டு - 3, பட்டாணி - கால் கப், கேரட்- பாதி, கீரை (ஏதாவது ஒரு கீரை) - ஒரு கப், உப்பு - ருசிக்கேற்ப, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.தாளிக்க: எண்ணெய் - தேவையான அளவு, கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு, கேரட் எல்லாவற்றையும்பொடியாக நறுக்கவும். பட்டாணியையும் கேரட்டையும் தனியாக மஞ்சள்தூள் சேர்த்துவேகவைக்கவும். கீரையுடன் 2 பருப்புகளையும் சேர்த்து வேகவிடவும். கடாயில் கொஞ்சம்எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய்,இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு, தக்காளி சேர்த்து வதக்கவும்.வேகவைத்த கீரை, பருப்புகள், கேரட், பட்டாணி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துகொதித்ததும் இறக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
‘ஆல் இன் ஒன்’ தால், 30 வகையான பருப்பு மசியல், 30 Type Paruppu Masiyal, சேர்த்து, கேரட், கீரை, பூண்டு, இஞ்சி, தக்காளி, பச்சை, மிளகாய், வெங்காயம், Recipies, சமையல் செய்முறை