நெய் பருப்பு மசியல்
தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், தக்காளி - 2,பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,சாம்பார்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன்,மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: தக்காளியைப் பொடியாக நறுக்கவும். 2 பருப்புகளையும் குக்கரில் குழையவேகவிடவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு, வெடித்ததும் தக்காளிதுண்டுகள், மிளகாய்தூள், பெருங்காயம், சாம்பார்தூள் போட்டு நன்றாகக் கிளறவும். 2நிமிடத்துக்குப் பிறகு உப்பு போடவும். கடைசியில் வெந்த பருப்பைப் போட்டு கொஞ்ச நேரம்கொதிக்க விடவும். இந்த ‘தாலை’ விரைவாகவும் சுலபமாகவும் செய்யலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெய் பருப்பு மசியல், 30 வகையான பருப்பு மசியல், 30 Type Paruppu Masiyal, போட்டு, டேபிள்ஸ்பூன், டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை