உளுத்தம் பருப்பு மசியல்
தேவையானவை: உடைத்த உளுத்தம்பருப்பு - ஒரு கப், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, தனியாதூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் -கால் டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து,குறைந்த நீரில் 10 நிமிடம் வேகவிடவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,சீரகம், பெருங்காயத்தூள், தனியாதூள், மஞ்சள்தூள் போடவும். 2 நிமிடம் கிளறவும். பிறகு இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து, வெந்த உளுத்தம்பருப்பையும் கொட்டி, உப்பு போட்டு, 5 நிமிடம்கிளறவும். சுவையான உளுத்தம்பருப்பு மசியல் ரெடி. இது சப்பாத்தி அல்லது சாதத்துடன் பிசைந்துசாப்பிட நன்றாக இருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உளுத்தம் பருப்பு மசியல், 30 வகையான பருப்பு மசியல், 30 Type Paruppu Masiyal, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை