பெல்லாரி தால் (ஆந்திரா)
தேவையானவை: பெரிய வெங்காயம் - 1, துவரம்பருப்பு - அரை கப், புளித்தண்ணீர் - 4 டீஸ்பூன்,உப்பு - ருசிக்கேற்ப, கறிவேப்பிலை, மஞ்சள்தூள் - சிறிதளவு.அரைக்க: துவரம்பருப்பு - அரை கப், தேங்காய் துருவல் - ஒரு சிறிய கப், பச்சை மிளகாய் - 3அல்லது 4, தனியா - கால் கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு கப், சீரகம் - 3 டீஸ்பூன்,பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள சாமான்கள் அனைத்தையும் மிக்ஸியில் அரைத்துவைக்கவும்.துவரம்பருப்பை வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு,காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதில் கறிவேப்பிலையும், மஞ்சள்தூளும்சேர்க்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், அரைத்த விழுதையும் வெந்த பருப்பையும்சேர்த்து சிறிதுநேரம் கொதிக்க விடவும். வித்தியாசமான சுவையுடன் பெல்லாரி பருப்பு மசியல்ரெடி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெல்லாரி தால் (ஆந்திரா), 30 வகையான பருப்பு மசியல், 30 Type Paruppu Masiyal, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை