பருப்புவடை தால்

தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பெரிய வெங்காயம் - 1, பொடியாக நறுக்கிய இஞ்சி -இரண்டரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரைடீஸ்பூன், பச்சை மிளகாய் - 4 அல்லது 5, தயிர் - 3 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன்,மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பருப்பை தண்ணீரில் 2 மணி நேரம்ஊறவிடவும். தண்ணீரை வடித்துவிட்டு பச்சை மிளகாய், இஞ்சி, தயிர் சேர்த்து கெட்டியாகஅரைக்கவும். கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டு (வடை போட) மீதியை சிறிது நீர்விட்டுகரைத்துக்கொள்ளவும். எடுத்து வைத்த பருப்பு கலவையை வடைகளாக தட்டி, எண்ணெயில்பொறித்து எடுக்கவும்.கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தைபோட்டு வதக்கவும். மஞ்சள்தூள் சேர்க்கவும். 2 நிமிடம் கழித்து கரைத்து வைத்த பருப்புக்கூழைஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். (கெட்டியாகவோ, தளர்த்தியாகவோ, அவரவர்விருப்பப்படி, தண்ணீர் கூட்டியோ, குறைத்தோ சேர்க்கவும்.) பொரித்து வைத்துள்ள வடைகளைபோட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பருப்புவடை தால், 30 வகையான பருப்பு மசியல், 30 Type Paruppu Masiyal, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை