முழுப்பயறு தால்
தேவையானவை: பாசிப்பயறு - அரை கப், கடலைப்பருப்பு - அரை கப், பழுத்த தக்காளி - 4,பெரிய வெங்காயம் - 4, இஞ்சி - ஒரு துண்டு, மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் -ஒன்றரை டீஸ்பூன், கரம் மசாலாதூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், தனியாதூள் -அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை: தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், இஞ்சி, மல்லித்தழைமூன்றையும் பொடியாக நறுக்கவும். பருப்பையும் பயறையும் குக்கரில் குழைய வேகவிட்டு (6 விசில்வைக்கவும்) ஆறவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சி போட்டு 2 நிமிடம்பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி துண்டுகளை சேர்த்து மேலும் 2 நிமிடம்வதக்கவும். இப்பொழுது வேகவைத்துள்ள பருப்பை சேர்த்து கொதிக்க விடவும். எல்லாதூள்களையும் போட்டு சர்க்கரை, உப்பு சேர்த்து கிளறவும். 5-லிருந்து 10 நிமிடம் வரைகொதிக்கவிடவும். நடுவில் கிளறிவிடவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி பூரி,சப்பாத்தியுடனோ, சூடான சாதத்துடனோ சேர்த்து சாப்பிடவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முழுப்பயறு தால், 30 வகையான பருப்பு மசியல், 30 Type Paruppu Masiyal, டீஸ்பூன், சேர்த்து, இஞ்சி, வெங்காயம், Recipies, சமையல் செய்முறை