பாசிப்பருப்பு தால்

தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - அரை கப்,தக்காளி - 1 அல்லது 2, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், பூண்டு - 3 பல், பச்சை மிளகாய் - 3,மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை: தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கவும். பருப்பை, உப்பு சேர்த்து பூண்டுடன்வேகவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பச்சை மிளகாய்,தக்காளி சேர்த்து, மிளகாய் பொடி தூவி மேலும் 2 நிமிடம் வதக்கவும். சிறிது நேரம் கழித்து,வெந்த பயத்தம் பருப்பை சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, 2 கொதிகொதிக்கவிடவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாகஇருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாசிப்பருப்பு தால், 30 வகையான பருப்பு மசியல், 30 Type Paruppu Masiyal, சேர்த்து, மிளகாய், பச்சை, தக்காளி, Recipies, சமையல் செய்முறை