தேப்லா
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்.
செய்முறை: மூன்றையும் ஒன்றாகக் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து மெத்தென்றுபிசையுங்கள். பிறகு, மெல்லிய சப்பாத்திகளாகத் திரட்டி, தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுங்கள்.பூரியை விட சற்று பெரிய சப்பாத்திகளாக, மெல்லியதாக திரட்டுங்கள்.தோசைக்கல்லைக் காயவைத்து, திரட்டிய சப்பாத்தியை போட்டு இரு புறமும் திருப்பிவிட்டு, அதுஉப்பும்போது, சற்று கனமான துணியைக் கொண்டு லேசாக அழுத்திவிடுங்கள். அதனுள் இருக்கும்காற்று, மற்ற இடங்களுக்குப் பரவி பூரி போல எழும்பி வரும். மறுபுறம் திருப்பிவிட்டு, மீண்டும்லேசாக துணியால் அழுத்திவிட்டு எடுத்து, சிறிதளவு நெய் தடவி வையுங்கள். மிக மிருதுவாகவும்சுவையாகவும் இருக்கும் இந்த சப்பாத்தி. குஜராத்தில் பிரபலமானது இந்த தேப்லா. மிக மிருதுவாகஇருக்கும்.குறிப்பு: சாப்பாத்தி மாவு பிசையும்போது, நெய் விரும்பாதவர்கள் வெறும் உப்பு, தண்ணீர் மட்டும்சேர்த்துப் பிசையலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேப்லா, 30 வகையான சப்பாத்தி, 30 Type Chappathi, நெய், Recipies, சமையல் செய்முறை