30 வகையான சப்பாத்தி (30 Type Chappathi)
இந்த சுவைகள் ரொம்பப் புதுசு30 வகை சப்பாத்தி!
ஒரு காலத்தில் வடஇந்தியர்களின் உணவாகக் கருதப்பட்டு வந்தசப்பாத்தி, இப்போது தமிழகத்திலும் மூலை முடுக்கெல்லாம் பரவி,நீக்கமற நிறைந்து விட்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுஎன்பதோடு, உடலுக்கும் ஆரோக்கியமானது என்பதால், நம் சமையல்ராஜாங்கத்தில் சப்பாத்திக்கு முக்கியமான இடம் கிடைத்துவிட்டது.டயட்டில் இருப்பவர்களுக்கான உணவாகவும் சப்பாத்தி இருப்பதால்,இப்போது வீட்டுக்கு வீடு தினமும் சப்பாத்தி என்ற நிலைகூடஇருக்கிறது.என்னதான் ஆரோக்கியமானது, சுவையானது என்றாலும், வெரைட்டிஇல்லை என்றால் நாக்கு மரத்துப் போவது இயல்புதானே...அதனால்தான், ‘இந்த 30 வகை வரிசையில் சப்பாத்தியையும் கொஞ்சம்கவனியுங்களேன்’ என்று நம் வாசகிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. தன்னை தலைமகளாக ஏற்றிருக்கும் வாசகிகளைஇப்படி ஏங்க வைப்பது ‘அவளு’க்கு அழகில்லையே! இதோ, உங்கள் கையில் தவழ்கிறது ‘30 வகைசப்பாத்தி’ சுவையான இதழ்!கோதுமை மாவை பிசையும் முறைகள், அதனுடன் சேர்க்கும் பொருட்கள், சப்பாத்தியை தேய்க்கும்முறைகள், சுட்டெடுக்கும் முறைகள் என்று சப்பாத்தியின் ஒவ்வொரு விஷயத்திலும் வித்தியாசம்காட்டி அசத்தி இருக்கிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்.ஹோட்டல்களில் மட்டுமே சாப்பிட முடியும் என்று சிலர் நினைத்திருக்கும் நாண், பொரித்தபரோட்டா, குல்சா போன்றவற்றையும் வீட்டிலேயே உங்கள் கைவண்ணத்தில் செய்து சாப்பிடவும்இந்த இணைப்பிதழ் உதவியாக இருக்கும். முள்ளங்கி, காலிஃப்ளவர், பாலக், தேங்காய் - முந்திரி,முளைப்பயறு, சோளம் என்று பல சத்தான பொருட்களைக் கொண்டு ஸ்டஃப் செய்யப்பட்ட...விருந்துகளுக்கு ஏற்ற விசேஷ சப்பாத்திகள் முதல், பல் இல்லாத முதியவர்களும் சாப்பிடக் கூடியமிருதுவான, பூப்போன்ற சப்பாத்தி வகைகள் வரை விதவிதமான சப்பாத்திகளுக்கான ரெசிபிக்கள்இங்கே அணிவகுக்கின்றன.தினுசு தினுசாக சப்பாத்தி செய்து, குடும்பத்தினரையும், கோடை விடுமுறைக்கு வரும்விருந்தினரையும் அசத்துங்கள். பாராட்டு மழையில் ‘ஜில்’லென நனையுங்கள்.
- வெந்தயக் கீரை சப்பாத்தி
- புல்கா
- தேப்லா
- சோயா மாவு சப்பாத்தி
- மசாலா சப்பாத்தி
- கோக்கி
- வாழைப்பழ சப்பாத்தி
- வெந்நீர் சப்பாத்தி
- முள்ளங்கி சப்பாத்தி
- காலிஃப்ளவர் சப்பாத்தி
- குல்சா
- லட்சா பரோட்டா
- சிலோன் பரோட்டா
- சோயா ஸ்டஃப்டு சப்பாத்தி
- க்ரீன் மசாலா சப்பாத்தி
- பீட்ரூட் சப்பாத்தி
- புதினா சுருள் பரோட்டா
- ஸ்வீட் சப்பாத்தி
- பாலக் சப்பாத்தி
- முளைப்பயறு சப்பாத்தி
- வெஜிடபிள் சப்பாத்தி
- சுரைக்காய் சப்பாத்தி
- கார்ன் சப்பாத்தி
- பீஸ் மசாலா சப்பாத்தி
- காக்ரா
- கடலைமாவு சப்பாத்தி
- ஆலு சப்பாத்தி
- கோதுமை மாவு பரோட்டா
- பொரித்த பரோட்டா
- நான்
- உதிர் வெங்காய பஜ்ஜி
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான சப்பாத்தி, 30 Type Chappathi, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1