புல்கா

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், உப்பு - அரை டீஸ்பூன், தண்ணீர் - தேவையானஅளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த மாவு, ‘மெத்’தென்று சற்று இளக்கமாக இருக்கவேண்டும். அந்தமாவிலிருந்து சிறிதளவு எடுத்து, மெல்லிய சப்பாத்தியாக திரட்டிக்கொள்ளுங்கள். பிறகு,தோசைக்கல்லை காயவைத்து, திரட்டிய சப்பாத்தியைப் போட்டு, இருபுறமும் இரண்டு நிமிடம்திருப்பிவிடுங்கள். பிறகு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சப்பாத்தி சுடும் வலையிலோ அல்லதுநேரடியாக அடுப்பிலோ சப்பாத்தியைப் போட்டால் அது நன்கு எழும்பி வரும். வந்தபின்,திருப்பிவிட்டு மறுபுறமும் வெந்ததும் எடுத்துவிடுங்கள். இதுதான், எண்ணெயில்லாத புல்கா.குறிப்பு: புல்காவை எடுத்தபிறகு அதன் மேலே விருப்பம் போல, நெய் அல்லது எண்ணெய் தடவிசாப்பிடலாம். புல்காவுக்காக, சப்பாத்தி திரட்டும்போது ஒரே சீராகத் தேய்க்க வேண்டும். ஒரு பக்கம்கனமாக வும், ஒரு பக்கம் லேசாகவும் இருந்தால் எழும்பி வராது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புல்கா, 30 வகையான சப்பாத்தி, 30 Type Chappathi, , Recipies, சமையல் செய்முறை