மசாலா சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாதூள் -ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரைடீஸ்பூன்,எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் மிளகாய்தூள், கரம் மசாலாதூள், மஞ்சள்தூள், உப்பு, நெய்எல்லாம் சேர்த்து கலந்து, தேவையான தண்ணீர் ஊற்றி பிசைந்துகொள்ளுங்கள். சப்பாத்திகளாகதிரட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் - நெய் கலவை சேர்த்து வேகவிடுங்கள். கரம்மசாலா மணத்துடன் கமகமக்கும் இந்த மசாலா சப்பாத்தி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மசாலா சப்பாத்தி, 30 வகையான சப்பாத்தி, 30 Type Chappathi, நெய், டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை