கடி ஜோக்ஸ் 61 - கடி ஜோக்ஸ்

செக்கிங் மாஸ்டர்: டிக்கெட் கொடுங்க?
பயணி: இந்தாங்க.
செக்கிங் மாஸ்டர்: இது பழைய டிக்கெட்
பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?
செக்கிங் மாஸ்டர்: ……… ????
-***-
தந்தை (மகனிடம்) : சில்லறை இல்லாம..பஸ்ல வராம...நடந்து வர்றியா? நான்தான் உன் கிட்ட இரண்டு ரூபாய் காயின் கொடுத்தேனே
மகன் : ஆனா..பஸ்ல கண்டக்டர்...இரண்டு ரூபாய் சில்லரையா இல்லாதவங்க ஏறாதீங்கன்னு சொன்னார்.
-***-
ஒருவர் : நம்ம மேனேஜர் அரை மணி நேரத்துக்கு முன்பு எல்லோர்கிட்டயும் பேசிச் சிரிச்சுக்கிட்டு இருந்தாரே, இப்ப ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழறார்?
மற்றவர் : 10 நிமிஷத்துக்கு முன்பு அவரோட மனைவி போன்ல பேசினார். அவ்ளோதான் ஆள் வெறி பிடிச்சவர் மாதிரி ஆயிட்டார்
-***-
டாக்டர் : ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..?
நோயாளி : நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!
-***-
ஒருவர்: ரஜினி மாதிரி வந்து காட்றேன்னு சொல்லிட்டு சென்னைபோன என் பையன் சொன்னமாதிரியே செஞ்சுகிட்டு இருக்கான்.
மற்றவர்: அப்படீன்னா ஹீரோ ஆயிட்டானா?
ஒருவர்: நீங்கவேற.....பஸ்ஸில கண்டக்டரா ஆயிருக்கான்.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 59 | 60 | 61 | 62 | 63 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 61 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ஒருவர், மாஸ்டர், செக்கிங், முன்பு, கையை, மாதிரி, எரிஞ்சு, மற்றவர், ரூபாய், பயணி, சிரிப்புகள், kadi, நகைச்சுவை, டிக்கெட், பஸ்ல, இரண்டு