கடி ஜோக்ஸ் 58 - கடி ஜோக்ஸ்
மாஸ்க் : அவரு காது டாக்டர் தானே , நீங்க எதுக்கு உங்க கண் பிரச்சனைய அவருக்கிட்ட சொல்லுறிங்க ?
அருண் : என்னோட கண்ணாடி காதுல சரியா நிக்க மாட்டுக்கே அதுதான்!
-***-
வாத்தியார் : தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனை இருந்து 6 இலையும், கீழே வி்ழுது, ரெண்டையும்் கூட்டினால் என்ன வரும்?
மாணவன் : குப்பை தான் சார்.
-***-
டாக்டர் : - தம்பி.! உங்களுக்கு இருக்கும் நோய் பரம்பரையா வர்றது. ஏதோ குணப்படுத்தியாச்சு. இந்தாங்க “பில்”
நோயாளி : - அப்ப இந்தப் பில்லை எங்க அப்பாவுக்கு அப்படி இல்லன்னா எங்க தாத்தாவுக்கு அனுப்புங்க.
-***-
தொண்டர் : எங்க தலைவர்கிட்டே பத்தாயிரம் ஜோடி செருப்புகள் இருக்கிறது ஆனா, அதெல்லாம் பணம் கொடுத்து வாங்கினது இல்லே மேடையில் தலைவர் பேசறப்போ வந்து விழந்த செருப்புகளைத்தான் சேகரிச்சு வெச்சிருக்கார்
-***-
தலைவர் : எதிர்க்கட்சிக்காரர், குழந்தைகளுக்கு இலவசத் துணியை மட்டும் கொடுத்துவிட்டு உங்களிடம் ஓட்டுக் கேட்கிறார். ஆனால், எங்கள் தலைவர் எத்தனையோ பெண்களுக்கு இலவசமாகக் குழந்தைகளையே கொடுத்திருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 56 | 57 | 58 | 59 | 60 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 58 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, தலைவர், எங்க, இலையும், இருந்து, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், டாக்டர்