கடி ஜோக்ஸ் 57 - கடி ஜோக்ஸ்

குற்றவாளி : யுவர் ஆனர் .. .. 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது .. ..
நீதிபதி : ஆமா .. ..
குற்றவாளி : அப்படித் தப்பிக்கற 1000 பேர்ல நானும் ஒருத்தனா இருந்துட்டுப் போறேன் .. ..
-***-
ஒருவன் : மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...
மற்றவன் : உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?
-***-
சர்வர் : முதலாளி சதாம் உசேன உங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கலாம் அதுக்காக போர்டுல இப்படியா எழுதறது.
முதலாளி : என்ன எழுதியிருக்கேன்?
சர்வர் : தயிர் சதாம் தக்காளி சதாம் லெமன் சதாம் ரெடி அப்படீன்னு எழுதியிருக்கீங்க.
-***-
தேனு : எனக்கு அந்த ஜிகர்தண்டா வாங்கி தர எதுக்கு ஊரு பூராம் சுத்தி கூட்டியாந்திங்க ?
மாஸ்க் : நல்லா வெயிலில் சுத்திட்டு vanthaaththaan ஜிகர்தண்டா குடிக்க நல்லா இருக்கும்
-***-
ரெண்டு மாமியார் பேசிக்கிறாங்க :
லல் : மாப்பிள்ளை மெகாசீரியல்ல நடிக்கறார்..
மாஸ்க் : அப்ப பர்ம்னண்ட் வேலைல இருக்கார்னு சொல்லுங்க !
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 55 | 56 | 57 | 58 | 59 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 57 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சதாம், ஜிகர்தண்டா, மாஸ்க், நல்லா, முதலாளி, குற்றவாளி, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, சர்வர்