கடி ஜோக்ஸ் 49 - கடி ஜோக்ஸ்
டாக்டர் : இனிமே....நீங்க குடியை ..சுத்தமா...நிறுத்தனும்....
நோயாளி : ஏன் ...டாக்டர், ரொம்பக்குடிச்சா, கிட்னி கெட்டுப் போயிடுமா?
டாக்டர் : ஆமா…எங்களுக்கு நல்ல ரேட் கிடைக்காது…!வாங்குரவனும்...நல்ல கிட்னியா குடுங்கன்னு...படுத்தி வெக்கிரானுங்க....
-***-
மாணவன் மாயா : ''எனக்கு எக்ஸாம்ல ஒரு கேள்விக்கும் பதில் தெரியல. வெறும் பேப்பரை மடிச்சிக்கொடுத்துட்டு வந்துட்டேன்."
மாணவன் போயா : "எனக்கும் பதில் தெரியாம, நானும் வெறும் பேப்பரை தான் மாயா கொடுத்துட்டு வந்தேன்..."
மாணவன் மாயா : "அடப்பாவி..டீச்சர் பார்த்தா ரெண்டு பேரும் காப்பி அடிச்சோம்னு நினைக்கப் போறாங்க"
-***-
நோயாளி : டாக்டர், தினமும் காலங்கார்த்தாலே... வயிறு ஒரேயடியா..... கூவுது!
டாக்டர் : அப்புடியா...ராத்திரியிலே...என்னதான்... சாப்பிடறீங்க??
நோயாளி : கோழி...குழம்பு...கோழி வறுவல்... சிக்கன் 65 இல்லேன்னா...பட்டர் சிக்கன்...சார்...
டாக்டர் : ஓஹோ....இனிமே...நீங்க...சேவல்...கோழி வேணாம்னு...பொட்டை ... கோழிய....வாங்கி சமைக்க சொல்லுங்க...இல்லாட்டி....ஊமை..கோழியா...பாத்து வாங்கணும்...
-***-
டைரக்டர் : நம்ம படத்துக்கான பாடல் காட்சியை ஃபாரின்லே எடுக்கப் போறேன்னு சொன்னா, ஏன்யா... சிரிக்கறே?
அசிஸ்டன்ட் டைரக்டர் : ரெண்டையுமேவா.....ன்னு...நெனச்சேன்...சார்...கதையையும் அங்கிருந்துதானே சார் சுட்டோம்....!
-***-
கட்டபொம்மன் : மாமனா, மச்சானா, மானங்கெட்டவனே
ஜாக்ஸன் துரை : என்ன பாஸ். இதுக்குப் போய் ரொம்ப எமோஷனலாயிகிட்டு? வரி கட்ட இஷ்டமில்லேன்னா இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே. அதை விட்டுடுட்டு ஏன் பாஸ் இப்படி திட்டுறீங்க. போங்க பாஸ். போய் ஆவுற வேலையை பாருங்க. கோச்சுக்காதீங்க.
கட்டபொம்மன் : ..??..
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 47 | 48 | 49 | 50 | 51 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 49 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், டாக்டர், jokes, ", சார், பாஸ், மாணவன், கோழி, மாயா, நோயாளி, டைரக்டர், சிரிப்புகள், கட்டபொம்மன், kadi, போய், சிக்கன், இனிமே, பதில், நீங்க, வெறும், பேப்பரை, நல்ல, நகைச்சுவை