தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - இந்தியச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்கள் மூலம் தெரியவந்தது"... என்ற வாசகத்தை நீங்கள் அடிக்கடி படிக்கவும் கேட்கவும் நேரிட்டிருக்கலாம். இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்பது இன்னும் பரவலாக
அனைவராலும் அறியப்படாத ஒன்றாக சிலர் மட்டுமே அறிந்ததாக இருக்கிறது.
அதாவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஜம்மு காஷ்மீரைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.
- தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை அணுகும் செயல்முறை
- தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி?
- முதல் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள்
- இரண்டாம் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள்
- தகவல் பெறும் உரிமை
- தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள்
- குடும்ப அட்டை பெறுவதில் சிக்கலா?
- ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமச் சட்டம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - Right to Information Act - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code