தகவல் பெறும் உரிமை - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005
தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்த பல்வேறு தகவல்கள் இங்கு உள்ளடக்கியுள்ளனர்.
1. எப்பொழுது இது அமலுக்கு வருகிறது?
அக்டோபர் 12, 2005-ல் அமுலுக்கு வந்தது. (திட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து (ஜீன் 15, 2005) 120-வது நாளில்), சில விதிகள் உடனடியாகச் செயல்படுத்தும் வகையில் அமலுக்கு வந்தன. அவையாவன, அரசு அதிகாரியின் கடமைகள், மக்கள் தவவல் தொடர்பு அதிகாரி, உதவி மக்கள் தகவல் தொடர்பு அதிகாரியின் பெயர்கள், மத்திய மற்றும் மாநில தகவல் கமிஷன் அமைத்தல், சட்டம் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இவை பொருந்தாமை, மற்றும் இந்தச் சட்டப் பிரிவுகளை அமலாக்குவதற்காக விதிமுறைகளை இயற்றும் அதிகாரத்தை வழங்குதல்
2. யாரெல்லாம் இதில் அடக்கம்?
ஜம்மு மற்றும் காஷ்மீரைத் தவிர இந்தச் சட்டம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.
3. தகவல் என்றால் என்ன அர்த்தம்?
தகவல் என்பது எந்தப் பொருள் அல்லது தகவல் எந்த வடிவில் இருந்தாலும் அதாவது, பதிவுப் பத்திரங்கள், ஆவணங்கள், குறிப்புகள், மின்னஞ்சல்கள், கருத்துக்கள், ஆலோசனைகள், செய்தி வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், பதிவேடுகள், ஒப்பந்தங்கள், புகார்கள், பேப்பர்கள், மாதிரிகள், முன்மாதிரிகள், மற்றும், பொது அதிகாரி தற்போதைக்கு அமலில் இருக்கும் எந்தச் சட்டத்தின் அடிப்படையிலும் பார்க்கக்கூடிய தனியார் சம்மந்தப்பட்ட தகவல் விவரங்கள் (மின் வடிவம் உட்பட). ஆனால் இதற்கு “கோப்பு குறிப்புகள்” உட்பட்டதல்ல.
4. தகவல் பெரும் உரிமை என்றால் என்ன?
அதில் கீழ்கண்ட உரிமைகள் அடங்கும்.
1. வேலைகள், ஆவணங்கள், ரெக்கார்டுகளைச் சோதனையிடுதல்.
2. ஆவணங்களில் இருந்து குறிப்புகள் எடுத்துக்கொள்வது, உண்மையென உறுதியளிக்கப்பட்ட பிரதிகள் அல்லது நகல்களைப் பெறுவது.
3. சான்றளிக்கப்பட்ட பொருட்களின் மாதிரிகள் எடுப்பது.
4. பிரிண்ட் அவுட், பிளாப்பிகள், டேப்ஸ், வீடியோ கேசட் வடிவில் தகவல் கிடைப்பது அல்லது இதர மின் முறைகள் மூலம் தகவல் பெறுவது.
அதிகாரிகள் மற்றும் அவர்களின் கடமைகள்
1. அரசு அதிகாரிகளின் கடமைகள் என்னென்ன?
சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து 120 நாட்களுக்குள் கீழ்கண்ட விபரங்கள் வெளியிடப்பட வேண்டும்.
* அதனுடைய அமைப்புச் செயல்பாடுகள் மற்றும் கடமைகள் பற்றிய விவரங்கள்
* அதனுடைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் அதிகாரம் மற்றும் கடமைகள்
* தீர்மானம் எடுக்கப்படும் செயல்முறைகளில் பின்பற்றப்படும் நடைமுறை, மேற்பார்வை செய்வதன் வழிமுறைகள் மற்றும் கடமைப் பொறுப்பு உட்பட
* பணிகளைச் செய்திட, அமைத்திட்ட விதிமுறைகள்
* அதனுடைய பணியாளர்கள் பணிகளைச் செய்திடப் பயன்படுத்தும் விதிகள், ஒழுங்குமுறைகள், நெறிமுறைகள், கையேடுகள், பதிவுகள்
* அது கொண்டிருக்கும் அல்லது அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆவணங்களின் இனங்களைக் கொண்ட அறிக்கை ஒன்று
* திட்டத்தை உருவாக்குவது சம்மந்தமாக அல்லது அதனுடைய அமலாக்கம் சம்மந்தமான, ஆலோசனைக்காக இருக்கக்கூடிய உறுப்பினர்கள் அல்லது பிரதிநிதித்துவங்கள் பற்றிய விவரங்கள்
* இதனால் உருவாக்கப்பட்ட வாரியங்கள், மன்றங்கள், குழுக்கள் மற்றும் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட பிற குழுக்களின் அறிக்கைகள். கூடுதலாக, அதனுடைய ஆலோசனைக் கூட்டங்கள் பற்றிய தகவல்கள் பொதுமக்கள் அணுகுக்கூடியதா என்பது பற்றிய தகவல்
* அதனுடைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பெயர், முகவரி அடங்கிய புத்தகம்
* அதனுடைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாங்கும் மாதச் சம்பளம், அதனுடைய வரையறை செய்யப்பட்ட விதிகளில் தரப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை முறை உட்பட
* அதனுடைய ஒவ்வொரு நிறுவனத்திற்கும் (ஏஜென்சி) ஒதுக்கப்படும் பட்ஜெட், அனைத்துத் திட்டங்களைப் பற்றிய விவரங்கள், முன்மொழியப்பட்ட செலவுத்தொகை மற்றும் பணப் பட்டுவாடா செய்யப்பட்டது பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, Right to Information Act, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, தகவல், சட்டம், அதனுடைய, அல்லது, பற்றிய, விவரங்கள், கடமைகள், உரிமை, பெறும், அறியும், அதிகாரிகள், உரிமைச், உட்பட, இந்தியச், வடிவில், இருக்கும், மாதிரிகள், ஆவணங்கள், | , குறிப்புகள், மின், பணியாளர்கள், பணிகளைச், வேண்டும், பெறுவது, பணியாளர்களின், கீழ்கண்ட, கொண்ட, அதிகாரி, indian, penal, code, தகவல்கள், inidan, தண்டனைச், right, information, இந்திய, அமலுக்கு, நிறைவேற்றப்பட்டதிலிருந்து, இந்தச், என்றால், என்ன, தொடர்பு, மக்கள், விதிகள், அரசு, அதிகாரியின், என்பது