முதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்தியச் சட்டம் » தகவல் அறியும் உரிமைச் சட்டம் » தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி?
தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி? - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005
மாதிரிக் கேள்விகள்
மாதிரிக் கேள்விகள் (உங்களது விருப்பத்திற்கேற்றாற்போல, தேவைப்படும் மாற்றங்கள் செய்துகொள்ளலாம்)
1. எனது விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகாரின் மேல் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தேதிவாரியாகக் குறிப்பிடும்படி வேண்டுகிறேன். உதாரணமாக, எனது விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகார் எப்போது, எந்த அதிகாரியிடம் போய்ச் சேர்ந்தது? அந்த அதிகாரியிடம் எவ்வளவு காலம் இருந்தது? இந்த காலகட்டத்தில் அவர் அதன் மேல் என்ன நடவடிக்கை எடுத்தார்?.
2. எனது விண்ணப்பம்/கணக்குத்தகவல் அறிக்கை/மனு/புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளின் பெயர் என்ன? அவர்களது பதவிகளின் பெயர்கள் என்ன? ஏதாவதொரு அதிகாரி நடிவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறாரா?
3. தங்களது பணியைச் செய்யாமல் பொதுமக்களைத் தொந்திரவுற்கு உள்ளாக்கும் இந்த அதிகாரிகளுக்கு எதிராக என்ன நடிவடிக்கை எடுக்க முடியும்? இந்த நடவடிக்கை எடுக்க எவ்வளவு காலமாகும்?
4. இப்போதைய நிலையில் எனது வேலை எப்போது முடியும்?
5. என்னுடைய விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகார் உங்களால் பெற்றுக் கொண்ட பின்னர், உங்களிடம் விண்ணப்பம்/கணக்குத்தகவல் அறிக்கை/மனு புகார்/ ஆகியவற்றைக் கொடுத்த அனைத்து நபர்களின் பட்டியலையும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். இந்தப் பட்டியலில் கீழ்க்கண்ட தகவல்கள் இருக்கவேண்டும்.
*விண்ணப்பதாரரின்/வரிசெலுத்துபவரின்/மனுதாரரின்/பாதிக்கப்பட்டவரின் பெயர் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட ரசீதின் எண்.
* விண்ணப்பம்/கணக்கு தகவல்அறிக்கை/மனு/புகார்-ன் தேதி.
* அவருக்கான பிரச்சினை தீர்க்கப்பட்ட தேதி.
6. மேற்படி விண்ணப்பங்கள்/கணக்குத்தகவல் அறிக்கைகள்/மனுக்கள்/புகார்கள் ஆகியவற்றில் அவற்றுக்கான வழங்கப்பட்ட ரசீதின் (பெறுகை ஒப்புதல் சீட்டு) எண் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் அடங்கிய ஆவணங்களின் நகல்கள் அல்லது அச்சுப் பிரதிகளை தயவு செய்து வழங்கவும்.
7. எனது மனுவை நீங்கள் பெற்றுக் கொண்ட பின்னர், பெறப்பட்ட விண்ணப்பங்கள்/கணக்குத் தகவல் அறிக்கைகள்/ மனுக்கள்/புகார்கள் ஆகியவற்றில் எதிலேனும் வரிசைக்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதையும், அதற்கான காரணங்களையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
8. இவ்வாறு நடந்திருந்தால் இது குறித்து எடுக்க வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைக்கான விசாரனை எப்போது நடைபெறத் தொடங்கும்?
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறும் நடைமுறை
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம்
இப்போது நீங்கள் உங்களது ஆர்டிஐ விண்ணப்பத்தை வெற்றிகரமாக எழுதி/தயார் செய்து விட்டீர்கள். உங்களது விண்ணப்ப மனுவை அதற்கான கட்டணத்துடன் கீழ்க்காணும் இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றின் மூலம் அனுப்பலாம்.
1) தபால் மூலமாக: அனுப்ப வேண்டிய அரசு அலுவலகத்தின் கணக்கு அதிகாரிக்கு ரூ.10/- வரையோலை/வங்கியாளர் காசோலையை இணைத்து அவ்வலுவலகத்தின் தகவல் தொடர்பு அதிகாரிக்கு (பி.ஐ.ஓ.) அனுப்பலாம்.
(2) நேரடியாக: நீங்கள் நேரடியாகவோ (அல்லது மற்றொருவரை அனுப்பியோ) சம்பந்தப்பட்ட அரச அலுவலகத்திற்கு சென்று, அங்கே உங்களது மனுவை அவர்களிடம் அளித்து, அதற்கான கட்டணத்தை அதே அலுவலகத்தில் பணமாக அளிக்கலாம்.
தமிழ்நாடு
உங்களது ஆர்டிஐ விண்ணப்பத்தை வெற்றிகரமாக எழுதி/தயாரித்து விட்டீர்கள். உங்களது விண்ணப்பத்தை அதற்கான கட்டணத்துடன் பின்வரும் இரண்டு வழிகளில் எதன் மூலமாகவாவது அனுப்பலாம்.
1) தபால் மூலமாக: அனுப்பவேண்டிய அரச அலுவலகத்தின் தலைமைக் கணக்கு அதிகாரியின் பேருக்க ரூ. 10/- வரையோலை அல்லது வங்கியாளர் காசோலை அல்லது ரூ. 10/- க்கு கோர்ட் ஸ்டாம்ப் எடுத்து உங்களது மனுவுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பலாம்.
2) நேரடியாக: நீங்களே நேரடியாகவோ அல்லது மற்றொருவர் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்கே உங்களது மனுவை அளித்து, அதற்கான கட்டணத்தைப் பணமாக அதே அலுவலகத்தில் நேரடியாகச் செலுத்தலாம்
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, Right to Information Act, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, தகவல், சட்டம், உரிமைச், உங்களது, விண்ணப்பம், பெறும், நடவடிக்கை, அல்லது, அதற்கான, அறிக்கை, ஆர்டிஐ, எனது, எடுக்க, என்ன, மனுவை, அறியும், புகார், அனுப்பலாம், கணக்குத், கணக்குத்தகவல், எப்போது, மேல், செய்து, வேண்டிய, எப்படி, பெறுவது, சட்டப்படி, நீங்கள், இந்தியச், கணக்கு, விண்ணப்பத்தை, தபால், இரண்டு, எழுதி, வெற்றிகரமாக, விட்டீர்கள், கட்டணத்துடன், வழிகளில், மூலம், வங்கியாளர், அங்கே, சென்று, அளித்து, அலுவலகத்தில், | , பணமாக, அலுவலகத்திற்கு, சம்பந்தப்பட்ட, அதிகாரிக்கு, அலுவலகத்தின், வரையோலை, இணைத்து, நேரடியாகவோ, நேரடியாக, மூலமாக, கொண்ட, மாதிரிக், code, கேள்விகள், புகாரின், அதிகாரியிடம், எந்த, penal, indian, information, right, இந்திய, தண்டனைச், inidan, எவ்வளவு, பெயர், விண்ணப்பங்கள், தேதி, அறிக்கைகள், மனுக்கள், புகார்கள், ரசீதின், வழங்கப்பட்ட, முடியும், நடிவடிக்கை, பெற்றுக், பின்னர், தயவு, ஆகியவற்றில்