முதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்தியச் சட்டம் » தகவல் அறியும் உரிமைச் சட்டம் » ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமச் சட்டம்
ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமச் சட்டம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005
ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமச் சட்டத்தைப் பற்றின தகல்வல்கள்
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசின் செயல்பாடுகள் தொடர்பாக தகவல் அறிய விரும்பும் நபர்கள், தகவல் அறியும் உரிமை அலுவலகத்திற்கு சென்று ஒரு தகவலுக்கு ரூ. 10 கட்டணம் செலுத்தி மனு செய்தால், மனுதாரர் அறிய விரும்பும் தகவல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கையொப்பத்துடன் வீடு தேடி வரும் வகையில் இச்சட்டம் செயல்பாட்டில் உள்ளது.
வயதான நபர்கள் மற்றும் பெண்கள் தகவல் அறியும் உரிமை மாவட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று மனு செய்வதில் சில சிரமங்கள் இருப்பதாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, மனுவையும் கட்டணத்தையும் ‘ஆன்லைன்’ மூலம் சமர்ப்பிக்கும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவையை பெற விரும்பும் பொதுமக்கள், பாரத ஸ்டேட் வங்கி அல்லது அதன் குழுமத்தை சேர்ந்த பிற வங்கி கணக்கின் வாயிலாக ரூ. 10/- ஐ ஆன்லைன் மூலம் செலுத்தி, தாங்கள் அறிய விரும்பும் தகவலுக்கான மனுவை சமர்ப்பிக்கலாம்.
இதேபோல், இதர கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் மூலமாகவும் மனுவுக்கான கட்டணத்தை வீட்டில் இருந்தே இன்டர்நெட் மூலமாக செலுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
ஆதாரம் : மாநில தகவல் ஆணையம், சென்னை
தேடல் தொடர்பான தகவல்கள்:
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, Right to Information Act, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, தகவல், சட்டம், அறியும், மூலம், ஆன்லைன், விரும்பும், உரிமைச், உரிமச், செலுத்தி, இந்தியச், மத்திய, அறிய, நபர்கள், வங்கி, | , அரசின், சென்று, உரிமை, indian, இந்திய, information, right, தண்டனைச், inidan, கட்டணத்தை, code, penal, மாநில