இந்தியச் சட்டம், இந்தியாவின் நீதிமுறைமையை செயல்படுத்துகின்ற ஒன்றாகும். இது ஆங்கிலேய பொதுச் சட்டத்தைச் சார்ந்தே இங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆங்கிலேயர் வெகுகாலமாக இங்கு ஆட்சிபுரிந்தமையால் அதன் நீதிமுறைமையை இந்தியர்களும் சார்ந்துள்ளனர். இதனோடு ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சட்டத் தாக்கங்களும் இந்திய நீதி முறைமையில் இடம் பெற்றிருக்கின்றது.
இந்திய அரசு, இந்திய மாநில அரசுகள், அல்லது இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதியின் அரசுகள் இயற்றும் சட்டங்களும், இந்தியக் குடியரசுத் தலைவர் அல்லது இந்திய ஆளுநர்கள் அல்லது துணை ஆளுநர்கள் பிறப்பிக்கும் அவசரச் சட்டங்களும், அல்லது இவர்களால் உரிமையளிக்கப்பட்டு இந்தியாவில் அமலில் உள்ள பிற சட்டங்களும் இந்தியச் சட்டங்கள் எனப்படுகின்றன.
இந்திய அரசியலமைப்பு மற்றும் ஆட்சியியல் சட்டம், குற்றவியல் சட்டம், ஒப்பந்தச் சட்டம், தொழிலாளர்ச் சட்டம், பொல்லாங்கு குற்றவியல் சட்டம் (டோர்ட் லா), குடும்பச் சட்டம், இந்துச் சட்டம், இசுலாமியச் சட்டம், கிருத்துவச் சட்டம், பொதுச் சட்டம், தேசியச் சட்டம், அமலாக்கச் சட்டம் போன்றவை இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சில சட்டங்கள் ஆகும்.
|
தகவல் அறியும் உரிமை சட்டம் |
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள்...
|
- மேலும்... |
|
|
|
இந்திய தண்டனை சட்டம் |
இந்திய தண்டனைச் சட்டம் 1860 (Indian Penal Code) குற்றவியல் சட்டத்தின் அனைத்து பிரத்தியேக அம்சங்களையும் கணக்கில் ...
|
- மேலும்... |
|
|
|
சட்டக்கேள்விகள் 100 |
இந்தியா, உலகின் செல்வச்செழிப்புள்ள மற்றும் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மிகவும் பண்டைய நாகரிகங்களின் தாயகம் ஆகும். இந்த நாகரிகம்... |
- மேலும்... |
|
|