முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 299
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 299
உடம்பிலே அழுக்குப் படிந்த சட்டை, தலையிலே ஒரு சிறு தொப்பி, காதிலே ஒரு மரக்கட்டைப் பேனா, இந்தக் கோலத்தோடு அவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால், இப்பொழுதும் ஏதோ கணக்கெழுதப் போகிறவன் போல் தோன்றியது. அவன் ஜமீன்தாருடைய கணக்குப் பிள்ளையானதால், அந்தச் சம்பாஷணையில் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான். ஆனால், கிராமத்தில் அரசியல் விவகாரம் தூண்டப்பட்டு விட்டால் வாயும் காதும் உடைய எந்த மனிதனும் சும்மாயிருப்பது கஷ்டமான காரியம். மேலும், தயாளபூர் அவனுடைய எஜமானின் கிராமமல்ல. ஆகவே, தயாளபூர் விவசாயிகளின் சம்பாஷணையில் பங்கெடுத்துக் கொள்வது அவனுக்குத் தவறாகத் தோன்றவில்லை. முன்ஷி தன்னுடைய கட்டைப் பேனாவை உள்ளங்கையிலே வைத்து உருட்டிக் கொண்டே பேசத் தொடங்கினான்.
“பண்டித்! ஏனென்று கேட்பார் யாருமில்லை என்று சொல்கிறாய். யார் கேட்பார்கள்? இங்கே எல்லோருமே கொள்ளைக்காரர்கள். ராஜா யாருமே இல்லை. அன்னியன் சொத்து கொள்ளையடிக்கப்படுகிறது. கொள்ளையடிக்க முடிந்தவர்கள் கொள்ளையடித்துக் கொள்ளுங்கள் என்பதுதான் இப்பொழுது நடைபெறுகிறது. சுபேதார் (கலெக்டர்) சாஹிப்பின் ஆபிசிலே, எனது மாமன் மகளுடைய மாப்பிள்ளை வேலை பார்க்கிறான். அவனுக்கு அநேக ரகசியங்கள்
தெரியும். இங்கே யாரும் ராஜா இல்லையாம். நூறு இருநூறு பரங்கிக் கொள்ளைக்காரர்கள் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறார்களாம். அப்படி ஒன்று சேர்ந்திருப்பதற்குத்தான் கும்பினி என்று பெயராம்.”
ரேக்கா-“முன்ஷி சரியாகச் சொல்கிறார். இதுவரை நாம் கும்பினிப் பகதூர் கும்பினிப் பகதூர் என்று கேட்டுக் கேட்டு, கும்பினி என்று யாரோ ஒரு ராஜா இருப்பதாகக் கருதிக் கொண்டோம். இப்பொழுதுதான் உண்மை புலப்படுகிறது.”
மௌலா-“அதனால்தான் எங்கு பார்த்தாலும் கொள்ளையோ கொள்ளையாய் இருக்கிறது. நியாய அநியாயத்தைக் கேட்பாரே இல்லை. இந்த ராம்பூரின் முன்ஷிக்கு முந்திய தலைமுறைகளிலே, நமது தயாள்பூர் கிராமத்தோடு ஏதாவது தொடர்பிருந்ததா?”
சோபரன்-“ராம்பூர் முன்ஷி நமது கிராமத்திற்கு எப்படி எஜமானன் ஆனான் என்பதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. டெல்லி பாதுஷாவோடு கும்பினி சண்டை தொடுத்தது...”
முன்ஷி-“டெல்லியோடல்ல, சோபரன்! மூர்ஷிதா பாத் நவாப்போடு சண்டை போட்டது. டெல்லி சிம்மாசனத்திடமிருந்து, மூர்ஷிதாபாத் ஏற்கனவே நம்முடைய தேசத்தைப் பிடுங்கிக் கொண்டிருந்தது.”
சோபரன்-எங்களுக்கு இதெல்லாம் ஞாபகமிருப்பதில்லை முன்ஷிஜி! எங்களுக்கு டெல்லிதான் தெரியும். நல்லது, மூர்ஷிதாபாத்திடம் ஆட்சி வந்தபொழுதும் ஓர் அரசர்தானே இருந்தார். நமக்கு யார் வந்தாலும் போனாலும் வரி செலுத்துவதோடு தீர்ந்தது. ஆனால், இப்பொழுது, எத்தனை
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 297 | 298 | 299 | 300 | 301 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்று, சோபரன், கும்பினி, ராஜா, முன்ஷி - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்