முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 296
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 296
யும் சுற்றிப் பார்த்து, அதைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் தயாரித்த தேசப்படத்தை (MAP) உனக்குக் காட்டினேனல்லவா சுரையா?”
“கடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, கமல்.”
“அது பிடித்தமானது மட்டுமல்ல. அதன் கையில் தான் தேசங்களின் எதிர்கால வாழ்வு இருக்கிறது. இந்த மரக்கட்டைகளால் செய்யப்பட்ட கப்பல்களிலே இணைக்கப்பட்டிருக்கும் பீரங்கியைப் பார்த்தாயல்லவா? இவைகள் நடமாடும் கோட்டைகள். மங்கோலியர்களுக்கு அவர்களுடைய குதிரைகளும் வெடிமருந்தும்தான் வெற்றியை அளித்தன. இப்பொழுது யாரிடம் இந்த யுத்தக் கப்பல்கள் இருக்கின்றனவோ, அவர்களே வெற்றி பெறமுடியும். ஆகவே, நானும் இந்த வித்தையைக் கற்றுக் கொள்ள நிச்சயித்திருக்கிறேன்.”
கமலனுக்கும் சுரையாவிற்கும் அவர்கள் ஆசை பூர்த்தியாகவில்லை. அவர்கள் கடல் மார்க்கமாகப் பாரத நாட்டிற்குப் புறப்பட்டார்கள். அது கடற்கொள்ளைக்காரர்களின் காலம். சூரத்தையடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால், கடற்கொள்ளைக்காரர்கள் அவர்களை வளைத்துக் கொண்டார்கள். தனது மற்ற தோழர்களோடு சேர்ந்து கமலனும் பீரங்கியையும், துப்பாக்கியையும் கடற்கொள்ளைக்காரர்கள் மீது பிரயோகித்தான். ஆனால் கொள்ளைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாய் இருந்தது. கமலனுடைய கப்பல் பீரங்கிக்குண்டுகளால் தாக்கப்பட்டுத் தண்ணீரிலே மூழ்கத் தொடங்கிற்று. சுரையா அவனுக்குப் பக்கத்திலே இருந்தாள். புன்முறுவல் பூத்த அவளது உதடுகளிலிருந்து வந்த கடைசிச் சப்தம் “சமுத்திர வெற்றி.”
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 294 | 295 | 296 | 297 | 298 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்த - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்