முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 294
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 294
தொடங்குகிறார்கள். இவர்களுக்கு ராஜா என்பது ஒரு சைத்தானாகவும் தோன்றுகிறது.”
“கமல்! கொஞ்சம் யோசித்துப் பார். இந்தப் பிளாரன்ஸின் விவசாயிகளோடு நம் பாரதத்தின் விவசாயிகளை ஒப்பிட்டுப் பார்த்தால்! அந்த எலும்பும் தோலுமான உருவத்தை இங்கு காண முடிகிறதா?”
“முடியாது. ஏனெனில் அரச ஆடம்பரத்திலே கோடிக்கணக்கான ரூபாய்கள் இங்கு செலவழிக்கப்படுவதில்லை.”
“இந்த வெனிஸிலும் பணக்காரப் பிரபுக்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் நமது பெரிய பெரிய சேட்டுக்களை அலட்சியமாக ஜெயித்து விடக்கூடியவர்கள்.”
“நம்முடைய பெரிய சேட்டுக்கள் தங்கள் பணப்பெருமையைக் கொடி நாட்டிக் காட்டுகிறார்கள். அவர்கள் பூமிக்கடியிலே புதைத்து வைத்திருக்கும் வெள்ளி நாணயங்களும் தங்க நாணயங்களும் அந்த இருட்டிலே கிடந்து புழுங்கிக் கொண்டிருக்கும். அவைகளை காற்றாட விட வேண்டும். கைக்குக்கை மாறும்படி செய்ய வேண்டும். அவைகள் புழங்காமல், உணவுப் பொருள்கள் அங்கங்கே கிடந்து உலர்கின்றன. கனிகள் கைமாறாமல் அழுகிப் போகின்றன. துணிகள் தேங்கிக் கிடந்து மக்கிப் போகின்றன. நமது சேட்டுக்கள், பணத்தைப் புதைத்து வைத்து லட்சத்திற்கு ஒரு கொடி, ஒரு கோடிக்கு ஒரு கொடி என்று கொடி கட்டுகிறார்கள்.”
சூரியனின் செவ்வொளி மறைந்து நீண்ட நேரமாகிவிட்டது. இப்பொழுது நான்கு புறமும் இருள் கவ்விக் கொண்டிருந்தது. சமுத்திர அலைகள் கரையிலே வந்து கல்லிலே மோதும் சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. யுவனும் யுவதியும் அந்த மணலை விட்டு எழுந்திருக்க விரும்பவில்லை. கடலோடு உண்மையிலே அவர்கள் நெருங்கிய அன்புத் தொடர்புடையவர்களாகக் கருதினார்கள். அவர்கள் தரைமார்க்கமாகவே இங்கு வந்து சேர்ந்திருக்கிறார்களாயினும், இந்தக் கடலின் மற்றொரு முனை பாரத தேசத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கிறதென்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே, இந்தப் பகுதியையும் அந்தப் பகுதியையும் ஒன்றாக இணைக்க முடியாதா என்று அவர்கள் பலமுறை சிந்தித்ததுண்டு. இரவு நீண்ட நேரத்திற்குப் பின் இருவரும் புறப்பட்டார்கள். வழியிலே சுரையா,
“நமது பாதுஷா, தனது ராஜ்யத்தில் அமைதியை நிலைநாட்டப் பெரும் பிரயாசைப்பட்டார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். ஆயினும் இப்படி நள்ளிரவிலே கவலையின்றி நாம் அங்கு சுற்ற முடியுமா? இந்த நிலைமையின் காரணமென்ன?”
“இங்கு எல்லோரும் சுகமாக இருக்கிறார்கள். இந்த நாட்டு நிலங்களிலே திராக்ஷை, ஆப்பிள், கோதுமை யாவும் விளைகின்றன.”
“நம் நாட்டு நிலங்களிலும் செல்வம் கொழிக்கத்தானே செய்கிறது.”
“அந்தச் செல்வத்தைக் கொள்ளையடிப்பவர்கள், நம் நாட்டில்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 292 | 293 | 294 | 295 | 296 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொடி, அவர்கள், கிடந்து, பெரிய, இங்கு, அந்த - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்