முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 123
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 123
அபாலாவின் தோழி வீட்டிற்குச் சென்று விசாரித்தான். அவள் ஒரு புதிய வர்ணச்சேலையையும் மேல் அங்கியையும் கொண்டுவந்து அவன் முன்னே வைத்து கண்களிலே நீர் அருவி பெருக, “என்னுடைய தோழி இந்த ஆடையைத்தான் அந்தக் கடைசி நேரத்தில் உடுத்தியிருந்தாள். ‘மத்ரபுரியில், உன் வரவுக்காகக் காத்திருப்பேன் என்று சுதாஸுக்கு உறுதி கூறியிருக்கிறேன்.’ இந்த வாக்கியங்களே அந்திம காலத்தில் அவளுடைய வாயிலிருந்து வந்தவை” என்று கூறினாள்.
அந்த ஆடையை வாரி எடுத்த சுதாஸ், கண்ணீர் ததும்பி வழியும்
தன்னுடைய கண்களிலே ஒத்திக்கொண்டான்; மார்போடு அணைத்துக் கொண்டான். அபாலாவினுடைய சரீரத்தின் நறுமணத்தை அந்த ஆடைகளிலே கண்டான்.
____________________________________________________
* இன்றைக்கு 144 தலைமுறைகளுக்கு முந்திய ஆரிய சமூகத்தின் கதை இது. அந்தக் காலத்தில்தான் வசிட்டர், விசுவாமித்திரர், பரத்துவாஜர் முதலிய மகரிஷிகள் ருக் வேத மந்திரங்களை இயற்றினர். அதே காலத்தில் தான் ஆரிய புரோகிதர்களுடைய உதவியைக் கொண்டு குரு பாஞ்சால ஆரிய சேனைத் தலைவர்கள், ஜன சமூகத்தின் உரிமைகளைப் பலமாகத் தாக்கி இறுதியாக அழித்து முடித்தார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 121 | 122 | 123 | 124 | 125 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரிய - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்