சேது - காட்சி - 36 - பகல்- EXT. / கோயில்
மிட் ஷாட் - கோயில் வாசலில் அம்பி அமர்ந்திருக்கிறான். குளோஸ் ஷாட் - அபிதா சாமி கும்பிடுகிறாள். குளோஸ் ஷாட் - அம்பி யோசனையில் இருக்கிறான்.
மிட் ஷாட் - கோயிலிலிருந்து வெளியே வரும் அபிதா அம்பியைப் பார்த்துச் சொல்கிறாள்.
அபிதா: இவ்வளவு சீக்கிரம் மனசு மாறி வருவாருன்னு நான் நினைக்கலே...
ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்துறதா வேண்டிண்டு இருந்தேன். சனிக்கிழமை சாத்திடணும்.
குளோஸ் ஷாட் - அம்பி : யாருக்கு...?
மிட் ஷாட்: சுவாமிக்குத்தான்.
அம்பி : அந்த வட மாலையை அவனுக்குக் கொண்டு போய்ச் சாத்து.
குளோஸ் ஷாட் - அபிதா : யாரைச் சொல்றேள்...?
மிட் ஷாட் - அம்பி : எல்லாமே நீதான்னு உன்னையே சுத்திச் சுத்தி வர்றானே அவனுக்கு...
குளோஸ் ஷாட் - அபிதா : என்ன சொல்றேள்...? அத்திம்பேர் ஆத்துக்கு வந்ததுக்கும், அவாளுக்கும் என்ன சம்பந்தம்?
மிட் ஷாட் - அம்பி : என்ன சம்பந்தமா- நாற்பதாயிரம்... நாற்பதாயிரம்னு பித்துப் பிடிச்சு அலைஞ்சுண்டு இருந்தாளே உங்க அக்கா... அந்தக் கோடி ஆத்துக்குள்ளே போயிட்டா... அக்ரஹாரமே காறித் துப்பறச்சே ஒருத்தியைப் போத்தி அழைச்சுண்டுப் போனானே... அது வேற யாருமில்ல உங்க அக்காதான்...
அம்பி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அபிதா சரிந்து உட்காருகிறாள்.
குளோஸ் ஷாட் - அபிதா அழுகிறாள் -
சஜஷன் அம்பி -
குளோஸ் ஷாட் - அம்பி : அன்னைக்கு மட்டும் அவன் அங்கே வரலேன்னா சுப்ரபாதம் அன்னைக்கு நம்ம ஆத்துலே இல்ல... சுடுகாட்டுல தான பாடி இருக்கணும்.
குளோஸ் ஷாட் - அபிதா அழுகையுடன் அம்பியைப் பார்க்கிறான்.
லாங் ஷாட் - அம்பி : அவகிட்டேயே அவ ஆத்துக்காரன் யாருன்னு கேட்டுண்டு போய் நாலு போடு போட்டான்... வந்துட்டான்...
குளோஸ் ஷாட் - சஜஷன் அபிதா -
அம்பி : அதுதான் நம்மவாளுக்கு எதையும் வாங்கிக் கட்டிண்டாதானே உறைக்கும்...
குளோஸ் ஷாட் - அபிதா அழுகிறாள்.
அம்பி : எப்பவோ, யாரோ நான்தான் உனக்குன்னு சொன்னதை மனசுலே போட்டுன்டு கொழப்பிக்¡தே...
பக்கத்திலிருக்கும் அர்ச்சனைத் தட்டை எடுத்துக்காட்டி சொல்கிறான் அம்பி.
தட்டுலே விழற அஞ்சு பத்து தட்சணையை நம்பி காலத்தை ஓட்டிண்டு இருக்கிறவன் நான்...
'உனக்கு நான் பொருத்தமானவன் இல்லை' என்பதுபோல் சைகை செய்கிறான் அம்பி. குளோஸ் ஷாட் - அபிதா கண்ணீருடன் அம்பியைப் பார்க்கிறாள்.
மிட் ஷாட் - அம்பி : என்னைவிட உன்னை விட நம்ம எல்லாரையும் விட அவன்தான் உசத்தி.
குளோஸ் ஷாட் - அபிதா அழுகிறாள்.
குளோஸ் ஷாட் - அம்பி : என்ன... கொஞ்சம் முரடு...சுவாமிகூட வெளிப் பார்வைக்கு வெறும் களிமண்ணுதான். அதை நாம கும்பிடுறது இல்லையா...? பிராமணத்தி வேறே யார் மேலேயும் ஆசைப்படக் கூடாதுன்னு எந்த சாஸ்திரமும் சொல்லலே... புரிஞ்சுக்கோ.
அம்பி எழுந்து போகிறான். அம்பி அழுதபடி யோசிகிறாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 34 | 35 | 36 | 37 | 38 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், அழுகிறாள், அம்பியைப்