முதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது
»
காட்சி 67 - அதிகாலை - EXT./ அக்ரஹாரம் INT./ அபிதா வீடு
சேது - காட்சி 67 - அதிகாலை - EXT./ அக்ரஹாரம் INT./ அபிதா வீடு
குளோஸ் ஷாட் - சூரியன் உதயமாக...
மிட் ஷாட் - பாண்டி மடத்திலிருந்து தப்பி வரும் சேது ஓடி வருகிறான். மேளச் சத்தம் கேட்கிறது. லாங் ஷாட் - அக்ரஹாரம்.
குளோஸ் ஷாட் - சங்கிலி பிணைக்கப்பட்ட நிலையில் சேது ஓடி வருகிறான். லாங் ஷாட் - சேது ஓடி வருகிறான்.
மிட் ஷாட் - சேது ஓடி வருகிறான்.
குளோஸ் ஷாட் - சேது அபிதா வீட்டுக்குள் வருகிறான். வீட்டில் கட்டப்பட்டிருக்கும் தோரணங்களைப் பார்க்கிறான்.
குளோஸ் ஷாட் - வீடு - ஜூம் - ஒரு தூணில் இரண்டு மாலைகள் மாட்டப்பட்டிருக்கின்றன. அபிதாவைத் தேடி சேது உள்ளே வருகிறான்.
குளோஸ் ஷாட் - கதவில் மோதுகிறான்.
குளோஸ் ஷாட் - உள்ளே ஒவ்வொரு இடமாக தேடிக் கொண்டுவரும் சேது ஓரிடத்தில் நிற்கிறான்.
மிட் ஷாட் - அபிதா இறந்து கிடக்கிறாள். அவள் குடும்பத்தினர் அழுதுகொண்டிருக்கின்றனர். குளோஸ் ஷாட் - சேது அதிர்ச்சியாய் பார்க்கிறான். குளோஸ் ஷாட் - சேது தளர்ந்து போய் வருகிறான். குளோஸ் ஷாட் - அபிதா உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. மிட்ட ஷாட் - தளர்ந்த நடையில் சேது வருகிறான். குளோஸ் ஷாட் - அபிதா உடல். மிட் ஷாட் - சேது பார்க்கிறான்.
குருக்கள்: இதுக்கா, இதுக்கா... எதுக்குடா இந்த எழவு எல்லாம்...
மிட் ஷாட் - சேதுவைப் பார்த்துத் திட்டியபடி குருக்கள் அழுகிறார்.
எல்லோருமே இப்படி நாசமா போறதுக்கா...என் வயிறு எரியறதுடா... எல்லாமே போயிடுத்து
குளோஸ் ஷாட் - அபிதா உடல். சேது தளர்ந்து போய் அபிதாவின் உடல் அருகில் அமர்கிறான்.
குளோஸ் ஷாட் - அபிதா உடல்.
குளோஸ் ஷாட் - சேது சலித்துக் கொள்கிறான்.
குளோஸ் ஷாட் - அபிதா உடல்.
மிட் ஷாட் - அபிதாவின் உடலை வெறித்துப் பார்த்தபடி சேது அழுகிறான்.
குளோஸ் ஷாட் - அபிதாவின் அக்காள் கணவரும், அம்பியும் அழுதபடி சேதுவைப் பார்க்கின்றனர்.
மிட் ஷாட் - சேது அழுகிறான்.
குளோஸ் ஷாட் - அபிதாவின் அக்கா அழுகிறாள்.
குளோஸ் ஷாட் - தலையில் அடித்துக்கொண்டு அழுகிறான் சேது.
குளோஸ் ஷாட் - அம்பியும், அத்திம்பேரும் அழுகின்றனர்.
குளோஸ் ஷாட் - சேது அழுகிறான். எழுந்து நிற்கிறான்.
குளோஸ் ஷாட் - சேது நடக்கிறான்.
அவன் மன நிலையை உணர்த்தும் சோகமான பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.
வார்த்தை தவறிவிட்டாய்...
கண்ணம்மா மார்பு துடிக்குதடி...
காற்றில் கலந்துவிட்டாய்...
கண்ணம்மா கண்கள் கலங்குதடி...
மிட் ஷாட் - சேதுவின் நண்பன் அவனை வழி மறிக்கிறான். மற்ற இரு நண்பர்கள் பைக்கில் வருகின்றனர். பைக்கை அப்படியே போட்டுவிட்டு சேதுவை நோக்கி வருகின்றனர்.
பறந்ததே... மறந்ததே...
எனது உயிரே...
படித்ததே முடித்ததே...
உனது கதையே...
எரியுதே உலகமே
சோக நெருப்பில்...
குளோஸ் ஷாட் - குப்பைத் தொட்டியிலிருந்து எச்சில் சோறு எடுத்துச் சாப்பிடும் ஊமைப் பெண் சேதுவைப் பார்க்கிறாள். டாப் ஆங்கிள் / மிட் ஷாட் - நண்பர்கள் சேதுவைப் பிடித்து உலுக்குகின்றனர். சேது மெளனமாக இருக்கிறான். ஊமைப் பெண் அழுதபடி ஓடி வருகிறாள்.
வார்த்தை தவறிவிட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி
டாப் ஆங்கிள்/ லாங் ஷாட் - அண்ணன், அண்ணி வேனில் வந்து இறங்குகின்றனர். நண்பர்கள் ஓடி வந்து சேதுவைக் காட்டி அழுதபடி ஏதோ சொல்கிறார்கள்.
மிட் ஷாட் - சேதுவுடன் ஊமைப்பெண் வருகிறாள். அண்ணன், அண்ணி இருவரும் அவனைத் தடுக்கின்றனர்.
நீ போன பாதை
எது என்று சொல்லு...
குளோஸ் ஷாட் - பாண்டிமடத்தின் வேன் வருகிறது.
குளோஸ் ஷாட் - அண்ணன் கதறி அழ அவரை உதறிவிட்டு சேது நடங்கிறான்.
குளோஸ் ஷாட் - பாண்டிமடத்தின் வேன் வருகிறது.
ஊமைப்பெண் சேதுவைத் தடுக்கிறாள்.
டாக் ஆங்கிள்/ மிட் ஷாட் - சேதுவின் நண்பர்கள் அழுகின்றனர். மிட் ஷாட் - சேதுவைப் போகவிடாமல் செய்ய அவன் காலைப் பிடித்து இழுக்கிறாள் ஊமை.
குளோஸ் ஷாட் - அண்ணன், அண்ணி அழுகின்றனர்.
மிட் ஷாட் - அண்ணி மயங்கிக் கீழே விழுகிறாள்.
நானும் பின்னே...
குளோஸ் ஷாட் - சேது வேனில் ஏறுகிறான். குளோஸ் ஷாட் - திரும்பி தன் குடும்பத்தினரையும் நண்பர்களையும் பார்க்கிறான் சேது. மிட் ஷாட் - ரோட்டில் உட்கார்ந்திருக்கும் ஊமைப்பெண் அழுகிறாள். அண்ணன் அழுகிறார்.
அங்கே வர இப்போதும் கூட...
குளோஸ் ஷாட் - ஊமை ஓடி வருகிறாள். வேன் கதவு சாத்தப்படுகிறது.
லாங் ஷாட் - வேன் போகிறது. ஊமைப் பெண் துரத்திக் கொண்டு ஓடுகிறாள்.
எதுவென்று சொல்லு...
மிட் ஷாட் - சேது - வேனில்...
உன் வீடு தேடி
நானும் வர...
தேர் வரும் நாள் வரும்...
என்று நினைத்தேனே...
தீ உன்னைத்
தீண்டவோ...?
திரும்பி நடந்தேனே...
பூமியில் தேவதை...
குளோஸ் ஷாட் - சேதுவை ஏற்றிக் கொண்டு வேன் பாண்டி மடத்தை நோக்கிப் போகிறது. ஊமைப் பெண் துரத்திக் கொண்டு ஓடுகிறாள்.
புழுதி மண் மூடலாமோ...
வார்த்தை தவறிவிட்டாய்...கண்ணம்மா மார்பு துடிக்குதடி...
காற்றில் கலந்துவிட்டாய்
கண்ணம்மா கண்கள் கலங்குதடி...
முடிந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், வருகிறான், அண்ணன், கண்ணம்மா, சேதுவைப், நண்பர்கள், அபிதாவின், பார்க்கிறான், அழுகிறான், வருகிறாள், கொண்டு, ஆங்கிள், ஊமைப்பெண், வேனில், தவறிவிட்டாய், அழுதபடி, அழுகின்றனர், வார்த்தை, மார்பு, துடிக்குதடி