முதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது
»
காட்சி 38 - பகல் - INT. / பாழடைந்த வீடு
சேது - காட்சி 38 - பகல் - INT. / பாழடைந்த வீடு
லாங் ஷாட் - பாழடைந்த பங்களாவின் வெளிப்புற தோற்றம் -ஜூம் - உள்ளே அபிதா நாற்காலியில் கட்டப்பட்டிருப்பது ஜன்னல் வழியே தெரிகிறது.குளோஸ் ஷாட் - சேது டென்ஷனாக சிகரெட் பிடிக்கிறான். குளோஸ் ஷாட் - அபிதா வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டிருக்க,மயங்கிக் கிடக்கிறாள். குளோஸ் ஷாட் - சேது எழுகிறான். மிட் ஷாட் - நாற்காலியில் கட்டப்பட்டிருக்கிறாள் அபிதா. மிட் ஷாட் - அவளை போதையாகப் பார்க்கிறான் சேது. மிட் ஷாட் - அபிதா மயங்கிக் கிடக்கிறாள். மிட் ஷாட் - அபிதாவின் கட்டை அவிழ்த்ததும் திமிறுகிறாள் அபிதா. மிட் ஷாட் - அபிதா தடுமாறிக் கீழே விழுகிறாள். மிட் ஷாட் - சேது அபிதாவைப் பார்க்கிறான். குளோஸ் ஷாட் - அபிதா முகத்தில் பீதி தெரிகிறது.
குளோஸ் ஷாட் - சேது : ஒரு காலத்துல ரொம்ப சந்தோஷமா இருந்தேன்டி. என்னைக்கு உன்னைப் பார்த்து இந்த எழவெடுத்த லவ்வ நான் பண்ண ஆரம்பிச்சனோ அன்னைக்குப் பிடிச்சது சனியன்.
குளோஸ் ஷாட் - அபிதா அச்சத்துடன் அவனைப் பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் - சேது : நான் கூட முன்னாடி நினைப்பேன். ஏண்டா இந்த லவ்வையும் பண்ணி, தற்கொலை பண்ணிக்கிட்டு சாவுறீங்கன்னு. அது இப்பதாண்டி புரியுது. உங்ககிட்ட மாட்டிக்கிட்டு கொஞ்ச கொஞ்சமா சாவுறதவிட அப்படி ஒரேடியாப் போய் சேர்றது எவ்வளவோ மேல் போல் இருக்கே...
குளோஸ் ஷாட் - அபிதா முகத்தில் பீதி.
குளோஸ் ஷாட் - சேது : நீ பயப்படாதே. நான் சாக மாட்டேன். ஏன்னா நீ விதவை ஆகக்கூடாது பாரு.
குளோஸ் ஷாட் - அபிதா பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் - சேது : என்னடா? இவன் விதவை கிதவைங்கிறானேன்னு பார்க்கிறியா- உனக்கும் எனக்கும் எப்பவோ கல்யாணம் ஆச்சு தெரியுமா.ரெண்டு பிள்ளைங்க கூட இருக்கு.
மிட் ஷாட் - சேது : அது ரெண்டும் ஸ்கூல்ல படிச்சுட்டு இருக்கு. நான் வேலைக்குப் போறேன்.நீ டாடா சொல்றே. நான் லேட்டா திரும்பி வர்றேன்.நீ கோவிச்சுட்டுப் பேச மாட்டேங்குறே.
ஒரு நாள் உனக்கு உடம்பு ரொம்ப முடியாமப் போகுது... விடிய விடிய இப்படி கற்பனையில் வாழ்க்கை நடத்தியாச்சு. இனிமே முடியாதுன்னு ஒண்ணுல்ல. அது உன் தலையெழுத்து.
சேது பேசிக் கொண்டிருக்க அவன் பின்னால் நிற்கும் அபிதா தப்பிக்க முயலுகிறாள். கதவைத் திறக்க முயற்சிக்கிறாள். அவளால் திறக்க முடியவில்லை. சத்தம் கேட்டுத் திரும்பிய சேது அவளைப் பிடித்து இழுத்து வந்து சுவரில் மோதுகிறான்.
குளோஸ் ஷாட் - சுவரின் சிமெண்ட் பெயர்ந்து அபிதா தலையில் விழுகிறது. அழுதபடி தரையில் சரிந்து உட்காருகிறாள் சேதுவும் உட்காருகிறான்.குளோஸ் ஷாட் -
சேது : இதப் பாரு... ரேப் பண்றதுக்காக நான் உன்னைத் தூக்கிட்டு வரலே...
அவள் தலையில் விழுந்த சிமெண்ட்டைத் துடைக்க முயலுகிறான். அவள் பயந்து அழுகிறாள்.
சேது : பயப்படாதே, புரிஞ்சுக்க. என்னை... மனசில இருக்கிறத உன்கிட்ட சொல்லணும் அவ்வளவுதான். எனக்கு உன்கூட டூயட் பாடணும்னு ஆசை கிடையாது. நீயும் நல்லா இருக்கணும் எப்பவுமே சிரிச்சுக்கிட்டு இருக்கணும். அதுதான் என் ஆசை. புரிஞ்சுதா?
குளோஸ் ஷாட் - அபிதா : சஜஷன் சேது
குளோஸ் ஷாட் - சேது : அது என்னால மட்டும்தான் முடியும். என்ன சொல்றே?
என்ற சேது அந்தக் கட்டிட சுவரில் எழுதப்பட்ட காதலர்களின் பெயரைச் சுட்டிக்காட்டுகிறான்.
சேது : இங்க பாரு, பாரு ஊர் உலகமே லவ் பண்ணிக்கிட்டு இருக்கு. கொஞ்சம்... கொஞ்சம் யோசனை பண்ணிப் பாரு...
குளோஸ் ஷாட் - அபிதா அழுதபடி யோசிக்கிறாள். குளோஸ் ஷாட் - டெஷ்னுடன் சிகரெட்டைப் பற்ற வைக்கிறான் சேது
குளோஸ் ஷாட் - சேது : இதெல்லாம் என்னமோ எனக்காகத்தான்னு நினைச்சிக்காதே.
குளோஸ் ஷாட் - கண்ணீருடன் நிமிர்கிறாள்.
குளோஸ் ஷாட் - சேது : நீ எல்லாம் ராணி மாதிரி இருக்க வேண்டியவ. உனக்கு எந்த குறையும் இல்லாம நான், என் அண்ணி, அண்ணன், ஃப்ரண்ட்ஸ் எல்லாம் பார்த்துப்போம். உங்கப்பன் உனக்குப் பார்த்து வச்சிருக்கானே ஒரு மாப்பிள்ளை.
தலையில் அடித்துக் கொள்கிறான்.
குளோஸ் ஷாட் - சேது : அவன் நல்லவன்தான். நான் இல்லேனு சொல்லல. ஆனா அவன கட்டிக்கிட்டு நீ எப்படி நல்லா இருக்க முடியும்? பாரு ரெண்டு பேரும் அவுத்து விட்டுட்டு மாத்தி மாத்திப் பேன் பார்க்க வேண்டியதுதான். இப்படி... இப்டி...
குளோஸ் ஷாட் - சஜஷன் - அபிதா சேது : அவனோட உன்னை இந்த மாதிரி சேர்த்து வச்சுக் கற்பனை பண்ணிப் பார்த்தாலே எப்படி இருக்கு தெரியுமா?
குளோஸ் ஷாட் - அபிதா - சஜஷன் சேது
குளோஸ் ஷாட் - சேது : எப்படி... சொல்றது... மனசு வலிக்குது.
சேதுவின் கண் கலங்குகிறது. திரும்பி கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான்.
சேது : இவ்வளவு சொன்னதுக்கப்புறமும் இல்ல, நீங்க தப்பாப் புரிஞ்சுன்டேள். நேக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லேனு சொன்னேன்னு வச்சுக்க...
மிட் ஷாட் - சுற்று முற்றும் பார்த்து ஒரு பெரிய கல்லைத் தூக்கி வந்து அவள் தலையில் போடுவது போல் உயர்த்துகிறான்.
குளோஸ் ஷாட் - அபிதா பயந்து அலறுகிறாள். லோ ஆங்கிள் ஷாட் - சேது கையில் கல் இருக்கிறது. மிட் ஷாட் - சேது கல்லை சற்றுத் தள்ளிப் போடுகிறான்.
குளோஸ் ஷாட் - சேது : கொன்னேப் போட்டுடுவேன்.
குளோஸ் ஷாட் - அபிதா மிரண்டு பார்க்கிறாள்.
மிட் ஷாட் - சேது : உன்னக் கொன்னுட்டு அப்புறம் எனக்கு மட்டும் என்ன இருக்கு? நானும் போய் சேர வேண்டியதுதான்.
குளோஸ் ஷாட் - அபிதா யோசிக்கிறாள்.
குளோஸ் ஷாட் - சேது : நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை. இந்த மாதிரி அடிச்சு மிரட்டும் போதும் கூட நீ வேற யாரோ ஒருத்தின்னு எனக்குத் தோணலை. நீ எனக்காகவே பிறந்தவ. எனக்கு மட்டும்தான் சொந்தமுன்னு ஒரு உரிமையிலதான்... ரொம்ப ரண வேதனையா இருக்குடி.
சேது வேதனைப்படுகிறான். குளோஸ் ஷாட் - அபிதா அழுகிறாள்.
குளோஸ் ஷாட் - சேது : என்னை இப்படி சித்ரவதை பண்ணாத. உன்னை கெஞ்சி கேட்டுக்கிறேன்.
என்ற சேது கையெடுத்துக் கும்பிட்டபடி திரும்புகிறான்.
மிட் ஷாட் - அபிதா அவன் காலில் விழுந்து அழுது கொண்டிருக்கிறாள்.
சேது : இங்க பார். ஏன் அழற?
அவளை சமாதானப்படுத்துகிறான் சேது.
பிடிக்கலையா? பிடிச்சிருக்கா? கேக்குறேன் இல்லே பிடிச்சிருக்கா...?
'பிடிச்சிருக்கு' என்பது போல் தலையாட்டுகிறாள் அபிதா. சந்தோஷத்துடன் அவள் தலையைத் தொட முயன்றவன் தயக்கத்துடன் கையை இழுத்துக் கொள்கிறான். மிட் ஷாட் - சேது முகத்தில் சந்தோஷப் பெருமிதம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 36 | 37 | 38 | 39 | 40 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், இருக்கு, தலையில், மாதிரி, எப்படி, கொள்கிறான், எல்லாம், இப்படி, முகத்தில், பார்த்து, பார்க்கிறாள், எனக்கு