சேது - காட்சி 2 - காலை - INT./ அபிதா வீடு
டாப் ஆங்கிள்/ லாங் ஷாட் - அக்ரஹாரம்.
மிட் ஷாட் - பேனிங்
சிறுவர்கள் சிலர் வேதம் படிக்கின்றனர். அப்போது மந்திரம் படிக்கும் பெண் (அபிதா ) குரல் கேட்கிறது. அனைவரும் திரும்பிப் பார்க்கின்றனர்.
ஸரணம் பவ கருணா மயி குரு
த னதயாளோ...
அபிதா பாடுகிறாள்
குளோஸ் ஷாட் - அபிதா: ஸரணம் பவ கருணா மயி குரு தீனதயாளோ...
கருணா ரஸ வருணாலய கரி ராஜ
க்ருபாலோ...
குளோஸ் ஷாட் - அபிதா பூப்பறித்தபடி பாடுகிறாள். அது நாகலு விதி நாமலி...
மிட்ஷாட் - அபிதா: சுதியா சுரப் பரிதம்...
மிட்ஷாட் - பூஜையறையில் சாமி கும்பிட்டபடி பாடுகிறாள் அபிதா. மதுசூதன மதுசூதன ஹரமா மஹ துரிதம்...
மிட்ஷாட் - மாட்டுத் தொழுவத்தில் சாம்பிராணி புகை காட்டியபடி பாடுகிறாள் அபிதா.
அபிதா: ஸரணம் பவ கருணா மயி... குரு தீ னதயா ளோ... க்ரினி மண்டல மணிகுண்டல... ஹனி மண்டல ஸயநா...
குளோஸ் ஷாட் - பாடியபடி கன்றுக்குட்டிக்கு பொட்டு வைக்கிறாள் அபிதா.
குளோஸ் ஷாட் - பூ.
குளோஸ் ஷாட் - பூக்கள்.
குளோஸ் ஷாட் - அபிதாவின் கண்.
குளோஸ் ஷாட் - அபிதாவின் வாய்.
குளோஸ் ஷாட் - புறா.
குளோஸ் ஷாட் - புறாக்கள்.
குளோஸ் ஷாட் - அபிதா துளசி மாடத்திற்கு தண்ணீர் ஊற்றியபடி பாடுகிறாள்.
அணி மாதி சுகுண பூஷண
குளோஸ் ஷாட் - சமையல் செய்தபடி பாடுகிறாள். மணி மண்டப ஸதநா...
குளோஸ் ஷாட் - அபிதா ஊஞ்சலில் ஆடியபடி பாடுகிறாள்.
வினதா சுகுதன வாஹன முனி மானஸ பவநா...
லாங் ஷாட் - அபிதா பாடியபடி கோலம் போடுகிறாள். மதுசூதன மதுசூதன ஹரமா மகதுரிதம்...
மிட் ஷாட் - துணியைத் துவைத்தபடி பாடுகிறாள் அபிதா. ஸரணம் பவ கருணாமயி...
குளோஸ் ஷாட் - அபிதா பாடிக்கொண்டே துணியைக் காயப்போடுகிறாள். குரு தீனதயாளோ...
குளோஸ் ஷாட் - அபிதா : ஸரணம் பவ கருணாமிய...
குளோஸ் ஷாட் - அபிதாவின் கை கோலம் போடுகிறது. லாங் ஷாட் / டாப் ஆங்கிள் - பாடியபடி அபிதா கோலம் போட்டு முடிக்கும்போது அவளது அப்பா (குருக்கள்) வருகிறார். அதே நேரத்தில் அபிதாவின் முறைப்பையனும் (அம்பி), இன்னொருவரும் (அய்யர்) வருகின்றனர்.
அய்யர் (அபிதாவின் அப்பாவிடம்): ஆகா... இவ பாடி கேக்கறச்சே லோகத்திலே உள்ள கவலை எல்லாம் பறந்து போயிடறது.. எங்கண்ணே பட்டுடும் போல இருக்கே... திருஷ்டி சுத்திப் போடுங்கய்யா.
குளோஸ் ஷாட் - குருக்கள் முகத்தில் பெருமிதம்.
மிட் ஷாட் -அய்யர் : வாசிக்கறாளோ, இல்லையோ...
குருக்கள்: ம்... காலேஜ்ல சேர்த்துவிட்டிருக்கேன். கட்டிக்கப் போறவன் அவ படிக்கணும்னு பிரியப்படுறான்.
அய்யர்: என்னடா அம்பி...
அம்பியைப் பார்த்து கேட்கிறார்.
குளோஸ் ஷாட் - அம்பி: ஆமா... மாமா... வேதத்தை மட்டும் படிச்சு நான் என்னத்த கண்டேன்? அவளாவது உலகத்தைப் புரிஞ்சுக்கட்டுமேன்னுதான்...
குளோஸ் ஷாட் - அய்யர்: வரப்போற ஆம்படையாள் இங்கிலீஷ்லே நாலு வார்த்தை பேசணுமுன்னு ஆசைப்படுறே... தப்பில்ல. அம்பி கொடுத்துவச்சவந்தான்.
குளோஸ் ஷாட் -குருக்கள் முகத்தில் மகிழ்ச்சி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், பாடுகிறாள், அய்யர், அபிதாவின், குருக்கள், மதுசூதன, மிட்ஷாட், பாடியபடி