மருதகாசி பாடல்கள் - பக்கம் - 84
ஆண் : சிரிக்கத் தெரிந்தால் போதும்-துயர் நெருங்காது நம்மை ஒரு போதும்! (சிரி) பெண் : சிரிக்கத் தெரிந்தால் போதும்-துயர் நெருங்காது நம்மை ஒரு போதும்! (சிரி) ஆண் : வனத்துக்கு அழகு பெண் : பசுமை ஆண் : வார்த்தைக்கு அழகு பெண் : இனிமை ஆண் : குளத்துக்கு அழகு பெண் : தாமரை-நம்முகத்துக்கு அழகு புன்னகை(சிரி) ஆண் : இரவும் பகலும் உண்டு-வாழ்வில் இளமையும் முதுமையும் உண்டு! பெண் : உறவும் பகையும் உண்டு-எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு (சிரி) பெண் : உறவை வளர்ப்பது. ஆண் : அன்பு பெண் : மன நிறைவைத் தருவது ஆண் : பண்பு பெண் : பொறுமையை அளிப்பது ஆண் : சிரிப்பு-இதைப் புரிந்தவர் அடைவது களிப்பு (சிரி) பெண் : மனிதன் மாறுவதில்லை-அவன் மாறிடில் மனிதனே இல்லை! ஆண் : வந்திடும் அவனால் தொல்லை-நீ சிந்தித்துப் பார் என் சொல்லை(சிரி) |
மாடப்புறா-1962
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 82 | 83 | 84 | 85 | 86 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 84 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண், சிரி, அழகு, போதும், உண்டு