மருதகாசி பாடல்கள் - பக்கம் - 85
பெண் : கம கம வென நறுமலர் மணம் வீசுதே! ஆண் : நம் திருமண முதல் இரவென அது பேசுதே! (கம) பெண் : ஜிலு ஜிலுவெனத் தென்றல் உடலைத் தழுவுதே! ஆண் : தன் நிலை மறந்து மனமும் எங்கோ நழுவுதே! பெண் : கலை மதியும் வானுடன் விளையாடுதே! ஆண் : என் கண்ணும் கருத்தும் உன் அழகில் ஆடுதே! பெண் : குறு குறு வென இரு விழி என்னைப் பார்க்குதே! ஆண் : அது கொஞ்சிப் பேசி மகிழ்ந்திடவே அழைக்குதே! பெண் : இதய நாடி பட பட வெனத் துடிக்குதே! ஆண் : ஒரு இனமறியா புது உணர்வு பிறக்குதே! பெண் : உள்ளக் கருத்தை உமது முகம் காட்டுதே! ஆண் : உன் சொல்லும் செயலும் நெஞ்சில் இன்பமூட்டுதே! (கம) |
சமய சஞ்சீவி.-1957
இசை : G. ராமநாதன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 83 | 84 | 85 | 86 | 87 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 85 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண்