மருதகாசி பாடல்கள் - பக்கம் - 80
ஆண் : மூங்கில் மரக் காட்டினிலே கேட்கு மொரு நாதம் முத்தமிடும் தென்றலினால் உண்டாகும் சங்கீதம் பெண் : மூங்கில் மரக் காட்டினிலே கேட்கு மொரு நாதம் முத்தமிடும் தென்றலினால் உண்டாகும் சங்கீதம் (மூங்கில்) ஆண் : நாதம் இல்லை யென்றால் கீதம் கிடையாது பெண் : ராகம் இல்லை யென்றால் தாளம் கிடையாது! ஆண் : காதல் இல்லை யென்றால் உலகம் கிடையாது பெண் : கண்கள் இல்லை யென்றால் காட்சியும் கிடையாது! (மூங்கில்) ஆண் : கண்கள் இருந்தென்ன? காட்சியும் இருந்தென்ன? கொஞ்சும் மொழியில்லை! குறிப்பும் தெரியவில்லை! பெண் : பிஞ்சும் காயாகும்! காயும் கனியாகும்! கனியில் சுவையிருக்கும்! காலம் வந்தால் பலன் கொடுக்கும் (மூங்கில்) ஆண்: காலம் வருவ தென்று? காயும் கனிவ தென்று? கண்கள் மலர்வ தென்று?இன்பம் வளர்வ தென்று? பெண்: ஆக்கப் பொறுத்த மனம் ஆறப் பொறுக்கலையா! பார்க்கும் பார்வையிலே நோக்கம் புரியலையா? (மூங்கில்) |
அழகு நிலா-1962
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 78 | 79 | 80 | 81 | 82 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 80 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - மூங்கில், பெண், தென்று, கிடையாது, இல்லை, யென்றால், நாதம், கண்கள்