மருதகாசி பாடல்கள் - பக்கம் - 78
பெண் : நேரம் வந்தாச்சு!-நல்ல யோகம் வந்தாச்சு! கூறைப் பட்டு எனக்காக ட்ரியோ! ட்ரியோ! ட்ரியோ! ட்ரியோ! இந்தக் குமரிப் பொண்ணு உனக்காக! ட்ரியோ! ட்ரியோ ட்ரியோ! ட்ரியோ! பக்கத்திலே வந்து நில்லுங்க மச்சான்! பட்டு வேட்டி இதைக் கட்டுங்க மச்சான்! அக்கம் பக்கம் இங்கே யாருமே இல்லே! வெட்கப் படவும் தேவையே இல்லே! ஆண் : நேரம் வந்தாச்சு!-நல்ல யோகம் வந்தாச்சு! நீ பொறந்தே எனக்காக! ட்ரியோ! ட்ரியோ! ட்ரியோ! ட்ரியோ! நான் பொறந்தேன் உனக்காக! ட்ரியோ! ட்ரியோ! ட்ரியோ! ட்ரியோ! சிட்டுக் குருவியே கிட்ட வாடி-உன்னைத் தொட்டுத் தொட்டு மனம் விட்டுச் சிரிப்பேன்! பட்டாம் பூச்சி போலே வட்டமிட்டே-உன்னை விட்டுப் பிரியாமெ ஒட்டியிருப்பேன்! பெண் : வச்ச பயிரு வளர்ந்தாச்சு! வளர்ந்த பயிரு கதிராச்சு! அதன் பலனை நாமடைந்து ஆனந்தமா வாழ்ந்திடணும்! எல்லா சுகத்தையும் அள்ளணும் மச்சான்! இதுக்கு மேலென்ன சொல்லணும் மச்சான்! நல்ல நாளாப் பாத்து வீட்டுக்கு வந்து பாக்கு வெத்தலை மாத்துங்க மச்சான்! ஆண் : வயலுக்கு ஒரு வரப்பாவேன்! வாழ்க்கைக்கு நான் துணையாவேன்! கால நேரம் பாத்துக்கிட்டுக் கல்யாணத்தை வச்சுக்குவோம்! மருத மலை முருகனுக்கு மாவிளக்கு போட்டிடுவோம்! வேலவனை நாம் துதிப்போம் வேண்டியதை அவன் கொடுப்பான்! |
தாய்மீது சத்தியம்-1978
இசை : சங்கர், கணேஷ்
பாடியவர்கள் : T. M. செளந்தரராஜன் & P. சுசீலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 76 | 77 | 78 | 79 | 80 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 78 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - ட்ரியோ, மச்சான், வந்தாச்சு, நல்ல, நேரம்