மருதகாசி பாடல்கள் - பக்கம் - 79
பெண் : காவேரிதான் சிங்காரி! சிங்காரிதான் காவேரி! கண்ணால் கண்டவ சிங்காரி! கலந்து கொண்டவ காவேரி! காதல்வெள்ளம் பெருக்கெடுத்து கரை மீறி-மனக் காட்டினிலே பாய்ந்ததனால் வெளியேறி-உங்க பக்கத்திலே வந்திருக்கும் வம்புக்காரி! ஆண் : ஆஹா! சிங்காரிதான் காவேரி! காவேரிதான் சிங்காரி! கண்ணால் கண்டவ சிங்காரி! கலந்து கொண்டவ காவேரி! தங்கம் போல மனமுடைய பணக்காரி! நல்ல தான தர்ம சிந்தனை யுள்ள உபகாரி! தந்திரத்திலே சிறந்த குள்ளநரி! என்னை மந்திரத்தால் மயக்கிய கைகாரி! பெண் : குணத்துக்கு அடிமை! பணத்துக்கு எதிரி! கொஞ்சிப் பாடிவரும் காவேரி! ஆண் : குறும்புக்காரியே! உனது கரும்புப் பார்வைதான் என்றும் என் வாழ்விலே எனக்கதிகாரி! பெண் : இனிக்கும் பேச்சிலே மனசும் மயங்கியே ஏங்கி வாடுபவள் சிங்காரி! ஆண் : ஏக்கம் தீரவே ஏய்த்து ஆளையே இழுத்து வந்தவதான் காவேரி! பெண் : அந்தக் காவேரிதான்! ஆண் : இல்லை சிங்காரிதான்! பெண் : ஊஹூம் காவேரிதான்! ஆண் : ஊஹூம் சிங்காரிதான்! |
வாழவைத்த தெய்வம்-1959
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள் : T. M. செளந்தரராஜன் & P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 77 | 78 | 79 | 80 | 81 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 79 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - காவேரி, பெண், சிங்காரி, காவேரிதான், சிங்காரிதான்